மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: கல்விக் கடனுக்கு இனி சாதாரண நடைமுறைகள்! மத்திய அரசின் அனுமதியுடன் பிரதமர் வித்யாலக்ஷ்மி திட்டம் அறிமுகம்!
Bala
UPDATED: Nov 17, 2024, 8:23:46 AM
பிரதமர் வித்யாலக்ஷ்மி திட்டம்
மாணவர்களின் உயர்கல்வி தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, பிரதமர் வித்யாலக்ஷ்மி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம், இந்தியாவின் திறமைமிக்க மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் முக்கிய முயற்சியாகும்.
இந்த திட்டத்தின் கீழ், மாணவர்கள் கல்விக் கடன்களையும், வட்டி மானியங்களையும் பிரத்யேக ஒருங்கிணைந்த இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும். தரமான உயர்கல்வியை எளிதில் பெறுவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம், குறிப்பாக 860 தரமான உயர்கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேரும் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
கல்விக் கடன்
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
1. கடன் உத்தரவாதம் தேவை இல்லை: மாணவர்கள் வங்கிகளில் கடன் பெற எந்தவிதமான உத்தரவாதமும் வழங்க தேவையில்லை.
2. வட்டி மானியம்: ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கல்விக் கடனுக்கு 3% வட்டி மானியம் வழங்கப்படும்.
3. கடன் உத்தரவாதம்: 7.5 லட்சம் வரை கல்விக் கடனுக்கு 75% உத்தரவாதத்தை இந்திய அரசு வழங்குகிறது.
4. முன்னுரிமை: தொழில்நுட்ப மற்றும் தொழில்முறைப் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் அரசு நிறுவன மாணவர்களுக்கு முன்னுரிமை.
5. கிராமப்புற மாணவர்களுக்கு ஆதரவாக: இந்த திட்டத்தின் மூலம், 2024-25 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்தில், 7 லட்சம் மாணவர்கள் வட்டி மானியத்தின் பயனை அனுபவிப்பார்கள்.
Education loan
விண்ணப்ப முறைகள்:
மாணவர்கள் ‘பிரதமர் வித்யாலக்ஷ்மி’ இணையதளத்திற்குச் சென்று நேரடியாக கல்விக் கடன் மற்றும் வட்டி மானியத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
வங்கி செயல்முறைகள் மிக எளிமையான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
வட்டி மானியம், இ-வவுச்சர் மற்றும் சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (CBDC) மூலம் செலுத்தப்படும்.
இந்த திட்டத்தின் மூலம், இந்திய இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வியை உறுதி செய்யும் அரசின் முயற்சிகள் அதிகரிக்கின்றன.
மேலும் தகவல்களுக்கு: vidyalakshmi.co.in