• முகப்பு
  • கல்வி
  • பல்கலைக்கழக மாணவர்களுக்கு கணினி என்பது மிகவும் அத்திவசியமானது

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கணினி என்பது மிகவும் அத்திவசியமானது

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Dec 13, 2024, 11:58:42 AM

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கணினி என்பது மிகவும் அத்திவசியமானது ஒன்று. இதனை மனமுவந்து வழங்குவதில் புரவலர் ஹாஷிம் உமர் முன்னுரிமைக்குரியவர்  என்று இம்போர்ட் மிரர் இன் ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம். வை. அமீர் தெரிவித்தார்.

original/2222
புரவலர் ஹாசிம் உமர் நற்பணி மன்றம் ஏழாவது முறையாக கல்வியை தொடரும் மாணவர்களுக்கான கணினி வழங்கும் நிகழ்வினை கொழும்பில் நடத்தியது.

இந்த நிகழ்வில் தினகரன் வார மஞ்சரியின் பிரதம ஆசிரியர் செந்தில் வேல், சுயாதீன தொலைக்காட்சி வசந்தம் செய்தி பணிப்பாளர் சித்திக் ஹனிபா, சமூக ஜோதி எம்.எம்.ரபிக், உள்ளிட்ட பலரும் இதன் போது பிரசன்னமாகி இருந்தனர்.

மேலும் எம்.வை.அமீர் உரையாற்றுகையில்.

புரவலர் ஹாசிம் உமர் சமூகத்துக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றார்.அதில் ஒரு கட்டமாக கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு தேவையான கணனிகளை வழங்கி வருகிறார்.இது பாராட்டுக்குரிய விடயமாகும்.

பொதுவாக இலங்கை யை பொருத்த வகையில் இவ்வாறு வறிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு இவ்வாறான உதவி செய்வது என்பது உண்மையிலேயே ஒரு சிறந்த பண்பாகும்.இவ்வாறு பெற்றுக் கொண்ட நீங்கள் உங்களது கல்வியை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

புத்தளம் ஏத்தாலை, கல்முனை,, கம்பஹா, திஹாரி பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் இதனை பெற்றுக் கொண்டனர்.

 

VIDEOS

Recommended