பேக்கரிகளில் 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல்.

JK

UPDATED: Oct 19, 2024, 10:50:39 AM

திருச்சி 

பொது மக்களிடம் இருந்து வரப்பெற்ற புகாரை அடுத்து மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சி தென்னூர், ஆழ்வார்தோப்பில் 2பேக்கரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது நாமக்கல்லில் இருந்து அழுகிய முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து கேக் மற்றும் பிரட்டுகள் தயார் செய்வதற்கு பயன்படுத்தியது தெரிய வந்தது.

ஸ்டார் பேக்கரி, அசாருதீன், ஒ.பாலம், ஆழ்வார் தோப்பு மற்றும் ஸ்ரீ ஆண்டவர் பேக்கரி கருணாகரன் ஆழ்வார் தோப்பு தென்னூர் ஆகிய 2தயாரிப்பு நிறுவனங்களிலும் சுமார் 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

அழுகிய முட்டை

அழுகிய முட்டைகள் கொண்டு தயார் செய்த 215 கிலோ பேக்கரி உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

மேலும் அவர்களின் உணவு பாதுகாப்பு உரிமமும் ரத்து செய்யப்பட்டு 2பேக்கரி தயாரிப்பு நிறுவனமும் தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தி சீல் வைக்கப்பட்டது.

மேலும் மேற்கண்ட பேக்கரிகள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டபடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்களாகிய பொன்ராஜ், செல்வராஜ், மகாதேவன், ஷீபா, ஹர்ஷவர்த்தினி மற்றும் ஆயுதப்படை காவலர்களும் உடனிருந்தனர்.

எச்சரிக்கை

மேலும், மாவட்ட நியமன அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

இது போன்ற அழுகிய முட்டைகளையோ அல்லது காலாவதியான பொருட்களையோ கொண்டு உணவு பொருட்கள் தயார் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடரப்படும்.

திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களோ அல்லது கலப்படம் படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களோ அல்லது சுகாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரிய வருமாயின் கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரியபடுத்த வேண்டும் என்றும், தகவல் அளிப்போரின் தகவல் ரகசியம் காக்கப்படும் என அவ்அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIDEOS

Recommended