• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • எலும்புக்கூடு போல் உள்ள கம்பம் முதலில் கீழே விழுமா? அல்லது சாய்ந்த நிலையில் உள்ள கம்பம் முதலில் விழுமா - வரதராஜபுரம் இளைஞர்கள் பந்தயம்.

எலும்புக்கூடு போல் உள்ள கம்பம் முதலில் கீழே விழுமா? அல்லது சாய்ந்த நிலையில் உள்ள கம்பம் முதலில் விழுமா - வரதராஜபுரம் இளைஞர்கள் பந்தயம்.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 6, 2024, 9:13:39 AM

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்த நிலையிலும் சில கம்பங்கள் எலும்புக்கூடு போல் காணப்படுகின்ற நிலையிலும் உள்ளது. 

பலம் இல்லாத இந்த மின் கம்பங்களால் மின்னழுத்த கம்பிகள். தொங்கியவாறு பல இடங்களில் காணப்படுகின்றது. 

அதேபோல் ஒரு கம்பத்தை சுற்றிலும் புதர் மண்டி உயர் மின்னழுத்த கம்பிகள் உள்ள வரைக்கும் பரவி உள்ளது. மழைக்காலத்தில் உயர் மின்னழுத்தம் இந்த செடி கொடிகள் வழியே பாய்ந்தால் அந்தப் பகுதி வழியே செல்லும் மக்கள் மீதும் ஆடு மாடுகள் மீதும் மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. 

கோடை காலம் முடிவுற உள்ள நிலையில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பலமான காற்று வீசும். அப்போது இந்த பகுதியில் உள்ள மின் கம்பங்களில் பல மின்கம்பங்கள் கீழே விழும் நிலை ஏற்படும்.

வரதராஜபுரம் பகுதியில் உள்ள இளைஞர்களிடையே, எலும்புக்கூடு போல் உள்ள கம்பம் முதலில் கீழே விழுமா? அல்லது சாய்ந்த நிலையில் உள்ள கம்பம் முதலில் விழுமா என பந்தயம் கட்டும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 

எருமை மாட்டின் மீது மழை பெய்தால் என்ன நிலையோ அதே நிலையில் தான் விடியா திமுக அரசின் ஒட்டு மொத்த மின்வாரியமும் செயலின்றி நடக்கின்றது என கிராமங்களில் உள்ள பெரியவர்கள் புலம்புகின்றனர்.

எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களையும் , எலும்புக்கூடு போல் காணப்படும் மின் கம்பங்களையும் , தொங்கியவாறு செல்கின்ற உயர் மின்னழுத்து கம்பிகளையும் போர்க்கால அடிப்படையில், சீர்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

VIDEOS

Recommended