குதிரை லாயத்தில் 82 ஆண்டுகளாக சேதமடைந்த‌ மேற்கூரைகளுடன் இயங்கிவரும் தீயணைப்பு நிலையம்.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 29, 2024, 7:53:43 PM

காஞ்சிபுரம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குதிரைகள் நிறுத்துவதற்காக கட்டப்பட்ட லாயத்தில் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையம், 82 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக கடந்த 1942 ஆம்ஆண்டு முதல் காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையம் நகரின் மையப் பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. 

Latest Kancheepuram News & Live Updates

இந்த வளாகத்திற்கு உள்ளேயே பொதுப்பணித்துறை அலுவலகம், நீதிமன்றம், சார்-பதிவாளர் அலுவலகம், ஆண்டர்சன் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. 

இங்கு, குதிரை லாயத்தில் தீயணைப்புத் துறைக்குச் சொந்தமான வாகனங்களை நிறுத்தக்கூட போதுமான வசதியில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். 

Kanchipuram News in Tamil

தீயணைப்பு அலுவலர், தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 53 பேர் பணியாற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு முறையான கட்டட வசதி இல்லாமலும், ஓய்வு அறைகள் இல்லாமலும் தீயணைப்பு வீரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை நிலையம் செயல்பட தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் மற்றும் மாவட்ட அலுவலகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் 16,953 சதுர அடி நிலப்பரப்பில் TS எண்.447ல் புதிய கட்டிடம் கட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்குநர் முன்மொழிந்ததின் அடிப்படையில் 2021 இல் தமிழக அரசு புதிய கட்டிடம் கட்ட அரசாணை வெளியிட்டது.

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையம்

இதுகுறித்து காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் ஒருவர் கூறியது, இந்த தீயணைப்பு நிலையம் 82 ஆண்டுகளாக குதிரை லாயத்தில்தான் செயல்பட்டு வருகிறது. தற்போது தீயணைப்பு நிலையம் உள்ள இடம் வருவாய்த் துறைக்குச் சொந்தமான இடம். 

இந்த இடத்தில் தீயணைப்பு நிலையம் கட்டிக்கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் மா.ஆர்த்தி அவர்கள் அனுமதி யளித்திருந்தார். தமிழக அரசு 2021 ம் ஆண்டே அரசாணை வெளியிட்டது. புதிய தீயணைப்பு நிலையம் கட்ட 6.99 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியது.

இந்த நிதி, கடந்த 2022 ஆம் ஆண்டே ஒதுக்கப்பட்டும், கடந்த 2.5 ஆண்டுகளாக தீயணைப்பு நிலையம் கட்டும் பணி தொடங்கப்படவே இல்லை.

Kancheepuram District News in Tamil 

தீயணைப்பு நிலையம் கட்டினால், அதன் கதிர் வீச்சு அருகில் (எந்தக் கோயிலுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) உள்ள கோயில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தைக் கூறி, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகம் இதுவரை கட்டடம் கட்டுவதற்கான திட்ட அனுமதியை வழங்கவில்லை என்று கூறப் படுகிறது.

அதுமட்டுமன்றி, இதைவிட பல மாடிக் கட்டடங்கள் தற்போதுள்ள தீயணைப்பு நிலையம் அருகிலேயே கட்டப்பட்டுள்ளன. நிதி ஒதுக்கப் பட்டு 3 ஆண்டுக்கு மேலாகி விட்டதால், அந்த நிதியை தற்போது அரசுக்கே திருப்பி அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்றைய செய்திகள் காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலை யத்தில் ஆண்டுக்கு சுமார் 982 தொலை பேசி அழைப்புகள் வருகின்றன. இதில் 200-க்கும் மேற்பட்டவை தீயணைப்பு தொடர்பான அழைப்புகள்.

புயல், சூறாவளி, பலத்த மழை, ஏரிகள் உடைப்பு, தொழிற்சாலைகள், கோயில்கள், பாதுகாப்பு என ஒவ்வொரு நாளும் தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுகின்றனர். தீயணைப்பு வீரர்களின் கஷ்டங்களை உணர்ந்து தாமதிக்காமல் விரைவாக புதிய கட்டடம் கட்டவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு

ஏற்கனவே உள்ள கட்டடம் மிகவும் பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை , மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வாங்கிய அதிநவீன கருவிகள் அனைத்தும் மழை தண்ணீர் பட்டு சேதம் அடைந்து விடுகின்றது.

அதுமட்டுமின்றி எங்களுடைய அனைத்து வாகனங்களும் வெயிலில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனாலயே அவ்வப்போது வாகனங்கள் சேதம் அடைந்து விடுகின்றது . டேங்குகள் லீக் ஆகுகின்றது . பைப்புகள் மெல்ட் ஆகிவிடுகின்றது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படுகின்றது என வேதனையுடன் தெரிவித்தார்.

82 ஆண்டுகளாக இங்கு குடி தண்ணீர் என்பதே இல்லை இதிலிருந்து எங்களுடைய தீயணைப்பு நிலைய அவலத்தை தெரிந்து கொள்ளலாம் என்றார். எனவே புதியதாக தீயணைப்பு நிலைய கட்டிடத்தை கட்டினால் மட்டும் தான் தீயணைப்பு துறையினர் நன்றாக வேலை செய்ய முடியும், பல லட்ச ரூபாய் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் இல்லாவிட்டால் அனைத்தும் வீணாக தான் போகும் என்றார். 

News

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகப் பொறியாளர் ஒருவரிடம் கேட்ட போது, கட்டடத்தின் உயரம் 18.3 மீட்டரும், பக்க வாட்டு அளவுகள் 6 மீட்டர் சுற்றளவிலும் இருக்க வேண்டும். ஏற் கெனவே கொடுத்த அளவில் பக்கவாட்டு சுவர்களின் அளவுகள் குறைவாக உள்ளது. 

வேறு வரைபடத்தை ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் அளித்து அனுமதி பெற்று மீண்டும் விண்ணப்பிக்குமாறு தீயணைப்புத் துறையினருக்கு தெரிவித்துள்ளோம்.

கட்டடம் கட்டுவது எங்கள் பணி. கட்டடம் கட்டுவதற்கு கடந்த ஜனவரி மாதமே ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதால், தீயணைப் புத் துறையினர் தாமதிக்காமல் கட்டடம் கட்ட விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

Latest Kancheepuram District News

ஒவ்வொரு துறையினரும் மாற்றி மாற்றி காலதாமதம் செய்வதை பார்க்கும்போது அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கு வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

12 மணிநேரப் பணி என்பதால் அவர்களால் சொந்தமாகச் சமைத்தும் சாப்பிட முடிவதில்லை.

பணியிடமும் சரியில்லை, வசிப்பிடமும் சரியில்லை என்ற நிலையில், நிரந்தரப் பணியாணையும் இல்லாமல், பிறரது உயிரையும் உடைமைகளையும் மீட்கும் பணியில் ஈடுபடுகிறார்கள் .இவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா?

 

VIDEOS

Recommended