- முகப்பு
- மாவட்டச் செய்தி
- லேசான மழைக்கு கூட தண்ணீர் வெளியேற வழி இன்றி பிரபல மருத்துவக் கல்லூரி தண்ணீரில் மிதக்கும் அவலம் நோயாளிகளும் மாணவர்களும் அவதி.
லேசான மழைக்கு கூட தண்ணீர் வெளியேற வழி இன்றி பிரபல மருத்துவக் கல்லூரி தண்ணீரில் மிதக்கும் அவலம் நோயாளிகளும் மாணவர்களும் அவதி.
லட்சுமி காந்த்
UPDATED: Nov 8, 2024, 10:23:27 AM
காஞ்சிபுரம் மாவட்டம்
தண்டலம் பகுதியில் பிரபல சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவ கல்லூரியில் ஆயத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் ஏராளமான நோயாளிகளும் இங்கு வந்து செல்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே மிகப் பிரபலமாக உள்ள இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாக நிலவி வருகின்றது.
District News & Updates in Tamil
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை சாலை பணிகளை செய்யும்போது கால்வாய்களை அடைத்து விட்டதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை பெய்த சிறிய மழைக்கு மருத்துவ கல்லூரி உள்ளே தண்ணீர் புகுந்து முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்கின்றது.
Saveetha Hospital
தண்ணீர் வெளியேற வழி இல்லாத காரணத்தினால் மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகளும் , மருத்துவ கல்லூரிக்கு வருகின்றன மாணவ மாணவிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றார்கள்.
மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு வந்தால் நோய் சரியாகும் என்ற நிலை மாறி தொற்று நோய்கள் ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனையுடன் கூறுகின்றார்கள்.