ஜூலை 31க்குள் ITR தாக்கல் செய்யவில்லை எனில் ரூ.5,000 அபராதம்.

கோபிநாத்

UPDATED: Jul 30, 2024, 10:20:45 AM

ITR | TDS

ஜூலை 31க்குள் ITR தாக்கல் செய்யவில்லை எனில் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். 

வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஆளாக நேரிடும். TDS உள்ளிட்டவை பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் வருமான வரியை உரிய நேரத்தில் தாக்கல் செய்வதன் மூலம் அந்த தொகையை திரும்ப பெறலாம்.

குறிப்பிட்ட காலத்திற்குள் கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம், வரி சலுகைகள் கிடைக்காமல் போகலாம்.

எனவே அரசு நிர்ணயித்த காலத்திற்குள் ITR தாக்கல் செய்வது நல்லது.

வருமான வரி கணக்கு தாக்கல்

"வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, 'ரீபண்ட்' பெறுவதற்காக தவறான தகவல்களைத் தெரிவிக்கக் கூடாது. தவறான தகவலை வழங்குவது அல்லது மறைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்" என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

2023-24 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள், இம்மாதம் 31ம் தேதி. இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை மற்றும் மத்திய நேரடி வரி வாரியத்தின் தகவலின்படி, இதுவரை ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.

வருமான வரி

புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன, மூன்றில் இரண்டு பங்கினர், புதிய நடைமுறையின்படி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். வருமான வரி விதிகளின்படி, தற்போது இரண்டு நடைமுறைகள் உள்ளன.

பழைய நடைமுறையின்படி, வரி அடுக்கு மற்றும் வரி விகிதம் அதிகமாக இருக்கும், ஆனால் பல்வேறு வரிச் சலுகைகளைப் பெற முடியும்.

மத்திய பட்ஜெட்

புதிய நடைமுறையின்படி, வரி அடுக்கு குறைவாக இருப்பதுடன், வரி விகிதமும் குறைவாக இருக்கும், ஆனால் வரிச்சலுகை கோர முடியாது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், புதிய நடைமுறைக்கு பல புதிய சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதுவரை ஐந்து கோடிக்கும் அதிகமானோர் தாக்கல் செய்துள்ளனர், அடுத்த இரண்டு நாட்களில் மீதமுள்ளவர்கள் தாக்கல் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நேரடி வரி வாரியம்

இந்நிலையில், மத்திய நேரடி வரி வாரியம் சமீபத்தில் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், 'ரீபண்டு' பெறுவதற்காக பொய்யான தகவல்களை அளிக்கக் கூடாது. தவறான தகவல் தருவது அல்லது தன் வருவாயை குறைத்துக் காட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ரீபண்டு கேட்பவர்களின் விண்ணப்பங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகின்றன. சந்தேகம் இருந்தால், சம்பந்தப்பட்டவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும். அதிலும் திருப்தி இல்லை என்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜூலை 31

சரியான மற்றும் துல்லியமான தகவல்களை மட்டுமே கணக்கு தாக்கலில் தெரிவிக்க வேண்டும். அவை முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, ரீபண்டு அளிக்கப்படும். தவறான தகவல் அளிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஜூலை 31க்குள் ITR தாக்கல் செய்யவில்லை எனில் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். வருமான வரித்துறையின் விசாரணைக்கு ஆளாக நேரிடும். TDS உள்ளிட்டவை பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் வருமான வரியை உரிய நேரத்தில் தாக்கல் செய்வதன் மூலம் அந்த தொகையை திரும்ப பெறலாம்.

குறிப்பிட்ட காலத்திற்குள் கணக்கை தாக்கல் செய்யாதவர்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம், வரி சலுகைகள் கிடைக்காமல் போகலாம். எனவே அரசு நிர்ணயித்த காலத்திற்குள் ITR தாக்கல் செய்வது நல்லது.

 

VIDEOS

Recommended