• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை "பொதுப்பிரிவு நோயாளிகளுடன் ஒரே படுக்கையில்" படுக்க வைக்கும் கொடுமை.

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை "பொதுப்பிரிவு நோயாளிகளுடன் ஒரே படுக்கையில்" படுக்க வைக்கும் கொடுமை.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 25, 2024, 12:55:58 PM

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துமனைக்கு, நாளொன்றுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

காஞ்சிபுரத்தைத் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி அருகாமையில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். 

இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, ஆண்கள் பொது மருத்துவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பெண்கள் பொது மருத்துவ பிரிவு, சர்ஜிகல் பிரிவு, குழந்தைகள் பொது பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. காய்ச்சலுக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு என தனி தனி வார்டுகள் உள்ளன. 

கோடை காலம் முடியும் தருவாயில், தட்பவெப்ப நிலை பருவ மாற்றம் பெற்றுள்ளதால் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் , வாந்தி, வயிற்றுப்போக்கு என ஏற்பட்டு ஏராளமான நோயாளிகள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு படையெடுக்கின்றார்கள்.

(ஏற்கனவே அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 150 படுக்கைகள் கொண்ட மூன்று வார்டுகள் புனரமைப்பு செய்ய போவதாக கூறி கடந்த ஒரு வருட காலமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.)

இந்நிலையில் மருத்துவமனைக்கு வருகின்ற வாந்தி, பேதி போன்ற தொற்று வியாதி நோயாளிகளுக்குண்டான‌ ID வார்டு எனப்படும் IDINFECTIOUS DISEASE என்ற தொற்று வியாதி வார்டே இல்லாததால், அவர்களை ஆண்கள் பொது மருத்துவ பிரிவுக்கும், பெண்கள் பொது மருத்துவப் பிரிவுக்கும் , சர்ஜிக்கல் வார்டுகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

அங்கு ஏற்கனவே , பிளட் பிரஷர், சுகர், ஆஸ்துமா, கிட்னி, இருதய நோய், காய்ச்சல் போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் வயிற்றுப்போக்கு நோயாளிகளையும், படுக்கைகள் இல்லாத காரணத்தினால், ஒரே பெட்டில் ஒன்றாக படுக்க வைக்கின்ற கொடுமை அரங்கேறி வருகின்றது.

இதனால் பொது வார்டில் இருப்பவர்களுக்கு, காய்ச்சல், மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் நோயாளியின் உறவினர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர். 

சமீக நாட்களாக மருத்துவனைக்கு வாந்தி பேதி , வயிற்றுப்போக்குக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவர்களை உள்நோயாளிகளாக தங்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் மருத்துவமனை நிர்வாகத்திற்கு இல்லை எனவே பட்டவர்த்தனமாக தெரிகின்றது.

பொது வார்டில் படுக்கை வசதி இல்லாததால் வயிற்றுப்போக்கு நோயாளிகளை தரையில் படுக்க வைக்கின்றனர். ஒரே பெட்டில் பொது பிரிவு நோயாளிகளையும் வயிற்றுப்போக்கு நோயாளிகளையும் படுக்க வைத்து குளுக்கோஸ் ஏத்துகின்றனர். 

இவர்கள் அனைவரும் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பும் போது பலருக்கு வயிற்றுப்போக்கு நோயாளிகளால், தொற்று கண்டிப்பாக ஏற்படும் என்ற மன பயத்தில் மற்ற நோயாளிகள் உள்ளனர். 

இவ்வாறு வாந்தி பேதி வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வரும் நோயாளிகள் பொது வார்டில் தங்க வைக்கப்படுவதால் பொது வார்டில் இருப்பவர்கள் அச்சத்துடன் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் சிலர் அங்குள்ள செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெறுகின்றன. 

பொது பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளிகளை வியாதி குணமாவதற்கு முன்னதாகவே மருத்துவர்கள் கட்டாய டிஸ்சார்ஜ் போட்டு அனுப்பி விடுவதால் அந்த நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்குச் மீண்டும் செல்லும் சம்பவங்களும் அதிகரிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் , மருத்துவ விதிப்படி எட்டு நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் என்ற விகிதாச்சாரம் இதுவரை கடைபிடித்தது இல்லை.

80 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்ற இடத்தில் ஒரே ஒரு செவிலியர் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவதால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி எந்த நோயாளிகளை கவனிப்பது எந்த நோயாளிகளை கைவிடுவது என்ற மன குழப்பத்திற்கு தள்ளப்படுகின்றார்.

இதனால் நோயாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சிகிச்சை முறையாக கிடைக்கவில்லை என்பது மிகவும் கவனத்திற்குரியது. 

"மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ள நிலையில் 16 செவிலியர்கள் போலீஸ் அகடமி உள்ளிட்ட பல இடங்களுக்கு டைவர்ஸ்சனில்" அனுப்பி உள்ள அவலம் தலைமை மருத்துவமனையில் தான் உள்ளது.

வயிற்றுப்போக்கு நோயாளிகள் அதிகம் வருவதை கருத்தில் கொண்டு தனியார் திருமணம் மண்டபத்தையோ, சத்திரம் , அல்லது விடுதியை வாடகைக்கு எடுத்து கேம்ப் நடத்தி அதில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் சமூக அலுவலர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.  

வார்டுகளில் படுக்கை வசதிகள் இல்லை, செவிலியர்கள் பற்றாக்குறை, போன்ற பிரச்சனைகளை மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் கோபிநாத் அவர்களிடமும், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களிடமும், பலமுறை மருத்துவர்களும் செவிலியர்களும் நோயாளிகளும் நோயாளிகளின் உறவினர்களும் புகார் கூறியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே மருத்துவமனை நிர்வாகம் உள்ளதாக நோயாளிகள் புலம்புகின்றனர்.

டைவர்ஷனை கேன்சல் பண்ணவோ, வயிற்றுப்போக்குக்காக திருமணம் மண்டபத்தில் கேம்ப் நடத்தவோ போன்ற எந்த விதமான நடவடிக்கையும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் இந்த வினாடி வரை எடுக்கவில்லை . 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் வருகிறது, மெட்ரோ ரயில் வருகிறது , நகரம் வளர்ச்சி அடையும் என விடியா திமுக அரசு கூறுகின்றது. ஆனால் நோயாளிகளுக்கு கிடைக்கக்கூடிய மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட சரியாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலையாக உள்ளது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended