• முகப்பு
  • உலகம்
  • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

கார்மேகம்

UPDATED: Nov 5, 2024, 6:32:56 AM

அமெரிக்கா

ஜனநாயக கட்சியை சார்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ், அதிபர் பதவிக்கு தமது வேட்பாளராக உள்ளார்.

மற்றப்படியாக, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபர் பதவிக்கான போட்டியில் இறங்கியுள்ளார்.

Us President Election 2024

இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, நாளை காலை 5.30 மணிக்கு முடிவடையும்.

வாக்குப்பதிவு நிறைவடைந்த உடனடியாக, 50 மாகாணங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.

உலகின் சக்தி வாய்ந்த நாடான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் 4- ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் 
தற்போதைய ஜனாதிபதியாக ஜோபைடன் உள்ளார் அவரது பதவி காலம் வருகிற 2025- ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது
 
அந்த நாட்டு சட்டப்படி நவம்பர்
மாதம் பிறந்து முதல் செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் நடைபெறும் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னால் ஜனாதிபதி டொனால்டு டிரம் களம் இறங்கினார்
 
ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் களத்தில் குதித்தார் 
 
(16-1/2 கோடி வாக்காளர்கள்)
 
அமெரிக்க மக்கள் தங்கள் ஜனாதிபதியை 
நேரடியாக தேர்ந்து எடுப்பதில்லை மாகாணங்களில் மக்கள் அளிக்கும் ஓட்டுகள் கணக்கிடப்பட்டு தேர்வுக்குழு உறுப்பினர்கள் வாயிலாக ( எலெக்ட்ரோல் காலேஜ்) ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்
 
இந்த எலெக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகள் ஒவ்வொரு மக்கள் தொகை அடிப்படையில் 
மாகாணத்துக்கு மாகாணம் வேறுபடும் அந்த வகையில் மக்கள் தொகை அதிகம் உள்ள கலிபோர்னியாவில் 54
எலெக்ட்ரோல் காலேஜ் ஓட்டுகளும் குறைந்த மக்கள் தொகை உள்ள வியாமிங் மாகாணத்தில் 3 ஓட்டுகளும் உள்ளன மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர்
 
இதில் 270 பேரின் ஆதரவை பெறுபவர்களே ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 48 மாகாணங்களில் அதிக ஓட்டு பெறுபவர்களுக்கு அனைத்து எலெக்ட்ரோல் ஓட்டுகளும் கிடைத்துவிடும் அவரே வெற்றி பெற்றவராவார்
 
மைன். நெப்ரஸ்கா மாகாணங்களில் மட்டுமே 2- ம் இடம் பெறுபவர்களுக்கு விகிதாச்சார முறைப்படி ஓட்டுகள் பகிர்ந்து வழங்கப்படும்
 
இந்த தேர்தலில் 16 கோடியே 50 லட்சம் பேர்
தகுதி படைத்த வாக்காளர்களாக உள்ளனர்
அமெரிக்க சட்டப் படி தேர்தலில் முன்கூட்டியே வாக்குகளை செலுத்த முடியும் அதன்படி இ - மெயில் மற்றும் தபால் மூலம் 7 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்து விட்டனர்
 
( இன்று தேர்தல்)
 
தேர்தல் களத்தில் கமலா ஹாரிஸ் டிரம்ப்
இடையே கடும் போட்டி
இருந்தது கருத்து கணிப்புகளில் இருவரும் சமபலத்திலேயே இருந்து வந்தனர் 50 மாகாணங்களில் வெற்றியை நிர்ணயிக்கும் மாகாணங்களாக அரிசோனா. ஜார்ஜியா.
மிக்சிகன். நெவாடா. வடக்கு கரோலினா. பென்சில்வேனியா. விஸ்கான்சின். ஆகியவை உள்ளன இதில் மிக்சிகன். விஸ்கான்சின் ஆகிய
2 மாகாணங்களில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
 
மற்றவற்றில் டிரம்பே முன்னிலையில் இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன
 
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று செவ்வாய்க்கிழமை நடக்கிறது இதனிடையே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ் இ- மெயில் மூலம் நேற்று தனது வாழ்க்கை செலுத்தினார் 
 
( உடனடியாக வாக்கு எண்ணிக்கை)
 
வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விடும் இழுபறி எதுவும் இல்லை என்றால் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது உடனடியாக தெரிந்து விடும் 
( வாக்கு சீட்டில் வங்க மொழி)
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வாக்கு சீட்டு முறையே பின்பற்றப்படுகிறது
வாக்குச் சீட்டுகள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இருக்கும்
 
அதே நேரம் நியூயார்க் நகரில் 200/ க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன எனவே அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குச் சீட்டுகள் ஆங்கிலம் தவிர சீனம்
ஸ்பானிஷ், கொரியன் மற்றும் இந்திய மொழியான பெங்காலி. ஆகிய மொழிகளில் அச்சிடப்பட்டு இருக்கும் என்று தேர்தல்கள் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே ரியான் தெரிவித்துள்ளார்.

VIDEOS

Recommended