• முகப்பு
  • லஞ்சம்
  • பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஆனந்த்

UPDATED: Oct 24, 2024, 10:50:48 AM

பூந்தமல்லி நகராட்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் ஒப்பந்ததாரர்களிடம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சமாக பரிசு பொருட்களை பெறுவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடியாக நுழைந்து அலுவலகத்தின் நுழைவாயிலை பூட்டிவிட்டு நகராட்சி கமிஷனர், நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரின் அறைகளிலும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை

மேலும் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஏராளமான பணத்தை லஞ்சமாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெற்றுள்ளதாக வந்த தகவலையடுத்து ஒவ்வொருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஊழியர்களின் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை

இந்த சோதனையின் போது நகராட்சி அலுவலகத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை தொடர்ந்து சோதனையானது நடைபெற்று வரும் நிலையில் சோதனையின் இறுதியில் எவ்வளவு பணம் பிடிப்பட்டது என்பது தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் 

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் இந்த சோதனையால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended