கோழி வளர்ப்பதில் இரு தரப்பினரிடையே தகராறு முதியவர் கொலை.

ஆர்.தீனதயாளன் 

UPDATED: Nov 24, 2024, 9:04:07 AM

தஞ்சாவூர் மாவட்டம்

கும்பகோணம் அருகே தேனாம்படுகை வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகையன் (வயது -82) இவர் வீட்டில் கோழி வளர்த்து வருகிறார்.

இவரது வீட்டில் கோழி அடைக்கும் இடத்திற்கு அப்பகுதியைச் சேர்ந்த மற்றொருவரின் கோழிகள் அந்த இடத்திற்கு வந்தன. அக்கோழிகளை விடிவித்து தருமாறு முருகன் வீட்டுக்கு வந்த அவற்றின் உரிமையாளர் கூறினார்.

ஆனால் எந்த கோழி என்பது அடையாளம் தெரியவில்லை என முருகையன் கூறினார். இதைத் தொடர்ந்து இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

அப்போது தாக்கப்பட்ட முருகன் மயங்கி விழுந்ததால் அவர் பட்டீஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட முருகையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended