- முகப்பு
- மாவட்டச் செய்தி
- உயிர் போகும் போதும் கடமை தவறாத ஓட்டுநரின் நெகிழ்ச்சியான சம்பவம்
உயிர் போகும் போதும் கடமை தவறாத ஓட்டுநரின் நெகிழ்ச்சியான சம்பவம்
ஆனந்த்
UPDATED: Nov 22, 2024, 11:22:01 AM
காஞ்சிபுரம் மாவட்டம்
கோட்டரம்பாளையம் தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர இவர் பூந்தமல்லி அரசு பேருந்து பணி மனையில் மாநகர பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை செல்லக்கூடிய தடம் எண் 578 பேருந்து ஓட்டுனரான இவர் நேற்று ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி வந்த போது நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூந்தமல்லி அருகே 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்தை ஸ்ரீதர் ஓட்டி வந்துள்ளார் அப்போது நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையிலும் பத்திரமாக வாகனத்தை ஓரங்கட்டி நிறுத்தினார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை
உடனடியாக பயணிகள் உதவியுடன் ஓட்டுநரை மீட்ட நடத்துனர் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் இறந்து போனார்.
நெஞ்சு வலி
மேலும் நெஞ்சு வலியால் இறப்பதற்கு முன்பு ஸ்ரீதர் 20 பயணிகளின் உயிரை காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது ஸ்ரீதர் உயிரிழந்த சம்பவம் சக ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிர் போகும் போதும் கடமை தவறாமல் பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு தன் உயிரை விட்ட அரசு பேருந்து ஓட்டுனரின் செயல் தற்பொழுது மக்களிடையே நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.