• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உயிரோடு இருக்கும் நபரை இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் வாங்கி திமுக பிரமுகர் நில மோசடி சம்பந்தப்பட்டவர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா ?

உயிரோடு இருக்கும் நபரை இறந்து விட்டதாக இறப்பு சான்றிதழ் வாங்கி திமுக பிரமுகர் நில மோசடி சம்பந்தப்பட்டவர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா ?

சண்முகம்

UPDATED: Oct 10, 2024, 4:02:15 AM

அரியலூர் மாவட்டம்

ஜெயங்கொண்டம் தாலுகா நரசிங்க பாலகிராமத்தில் செந்தமிழ் செல்வன் இவர் கடந்த 15 ஆண்டு காலமாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு சொந்தமாக நரசிங்கபாளையத்தில் சர்வே எண் 30 நிலம் உள்ளது.

செந்தமிழ்ச்செல்வன் வெளிநாட்டில் வேலை பார்த்ததால் இவர் நிலத்தை செந்தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக ஒரு பொய்யான தகவலை பரப்பி உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர் மிரட்டி அதே ஊரைச் சேர்ந்த திமுக பிரமுகர் கொண்டியர் என்பவர் செந்தமிழ்ச்செல்வனை இந்த இடத்தை எனது பெயருக்கு கிரையம் செய்து கொடுக்க வேண்டும் இல்லையென்றால் நீ உயிருடன் இருக்க மாட்டாய் என்று அதே ஊரைச் சேர்ந்த ரவுடிகளை  ( மோகன் ) வைத்து கடந்த இரண்டு நாளுக்கு முன்பு செந்தமிழ்ச்செல்வனை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது

Latest Crime News In Tamil

இதனால் செந்தமிழ்ச்செல்வன் மீன்சுருட்டி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார் கொண்டியார் திமுக ஆளுங்கட்சி பிரமுகர் என்பதால் போலீசாரை தன் வசப்படுத்திக் கொண்டு செந்தமிழ்செல்வனை போலீசாரை விட்டு அந்த இடத்தை எனக்கு கிரயம் வாங்கி கொடு என போலீசாரே மிரட்டுகின்றனர்.

செந்தமிழ்ச்செல்வன் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை  எனவும்

Online News In Tamil

இதனால் செந்தமிழ் செல்வன் கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார் கொண்டியார் என்ன ஆணை பிறப்பிக்கிறாரோ அதற்கு அதிகாரிகள் ஆட வேண்டும் இல்லையென்றால் உடனடியாக கொண்டி யார் மாறுதல் செய்துவிடுவது வழக்கமாக உள்ளது 

மேலும் உமா ராணி என்பவர் நிலத்தையும் இதே போல் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதால் உயிருக்கு பயந்து ஊரையே காலி செய்த உமாராணி மற்றும் செந்தமிழ் செல்வன்.

இவர்கள் கூறிய புகார்களை தீர விசாரித்து உண்மை எனும் தெரிய பட்சத்தில்

அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை எனக்கே வழங்கும்படி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended