அடுத்த நாட்டாமை யார் ? டொனால்டு டிரம்ப் - கமலா ஹாரிஸ் கடும் போட்டி.

கார்மேகம்

UPDATED: Nov 3, 2024, 12:56:19 PM

வாஷிங்டன்

அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் கடைசியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின்படி டிரம்ப்பும் கமலா ஹாரிசும் கிட்டத்தட்ட சமநிலையில் இருக்கிறார்கள் சரியாக சொல்வதென்றால் கமலாவை விட டிரம்ப் சற்று முன்னணியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 

நீயா ? நானா ? என இருவருக்கும் இடையே  கடும் போட்டி நிலவும் நிலையில் 11 தேர்தல் சபை இடங்களை கொண்ட அரிசோனா நெவாடா (6) விஸ்கான்சின் (10) பென்சில்வேனியா (19) மிக்சிகன் (15) ஜார்ஜியா (16) வட கரோலினா (16) ஆகிய 7 மாநிலங்கள் ஊசலாட்டத்தில் இருக்கின்றன

இந்த 7 மாநிலங்களிலும் மொத்தம் 93 தேர்தல் சபை ஓட்டுகள் உள்ளன இதில் யார் அதிக தேர்தல் சபை ஓட்டுகளை பெறுகிறார்களோ அவர்கள் வெற்றி பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Latest News & Updates of World Stories in Tamil

வாக்குப் பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கிவிடும் பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை இடங்களை (270) பெறும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் புதிய ஜனாதிபதி ஆவார்

தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் சபை உறுப்பினர்கள் (டிசம்பர்) 14- ந்தேதி அந்தந்த மாகாண தலைநகரங்களில் ஜனாதிபதி துணை ஜனாதிபதியை தேர்வு  செய்ய ஓட்டுப் போடுவார்கள் ஜனவரி 6- ந்தேதி நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் இந்த ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்

அதில் 270 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டுகளை பெறுபவர்கள் ஜனாதிபதியாகவும் துணை ஜனாதிபதி யாகவும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள் புதிய ஜனாதிபதி ஜனவரி 20- ந்தேதி பதவி ஏற்பார்

World News Today 2024 

ராஜ்ஜிய பொருளாதார ராணுவ ரீதியில் அமெரிக்கா எடுக்கும் முடிவுகள் மற்ற நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்த நாட்டின் ஒவ்வொரு அசைவையும் உலகம் கவனிக்க தவறுவது இல்லை இதனால் முக்கிய முடிவுகளை எடுக்கும் வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி அரியணையில் அடுத்து யார் அமரப் போகிறார் ? என்பதை இந்தியா உள்பட அனைத்து நாடுகளுமே ஆவலுடன் எதிர்பார்க்கின்றன டிரம்ப்பா ? கமலாவா ?பொறுத்திருந்து பார்ப்போம்.

 

VIDEOS

Recommended