- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருச்சி அருகே நில தகராறில் விவசாயி வெட்டி கொலை.
திருச்சி அருகே நில தகராறில் விவசாயி வெட்டி கொலை.
JK
UPDATED: Aug 8, 2024, 9:31:53 AM
திருச்சி மாவட்டம்
முசிறி அடுத்துள்ள பாலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பேரான் மகன் பழனிச்சாமி(55 ). அதே ஊரைச் சேர்ந்தவர் உத்தண்டன் மகன் அழகேசன்(50) இவர்கள் இருவருக்கும் சொந்தமான கிணறு உள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் பழனிச்சாமிக்கு சொந்தமான ஒரு மரத்தை அழகேசன் வெட்டியதாக தெரிகிறது. இன்று அழகேசன் தனது நிலத்தில் உழவு செய்து கொண்டிருந்த போது பழனிச்சாமி அங்கு சென்று எனக்கு சொந்தமான மரத்தை ஏன் வெட்டினாய்? என கேட்டுள்ளார். இருவருக்கும் வாய் தகராறு முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது.
Latest Trichy Crime News
அழகேசன் மற்றும் அவரது தந்தை இருவரும் பழனிச்சாமியை விரட்டி சென்று அரிவாளால் வெட்டியும், கட்டையால் சரமாரியாகதாக்கியும் உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த முசிறி காவல் ஆய்வாளர் கதிரேசன் மற்றும் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான அழகேசன் மற்றும் அவரது தந்தை உத்தண்டன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு