- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சாலையில் வழிந்து ஓடும் கழிவுநீரால் குண்டும் குழியுமான சாலை செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளது அரசு
சாலையில் வழிந்து ஓடும் கழிவுநீரால் குண்டும் குழியுமான சாலை செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளது அரசு
லக்ஷ்மி காந்த்
UPDATED: Oct 29, 2024, 6:59:44 PM
காஞ்சிபுரம் மாவட்டம்
சுங்குவார்சத்திரம் பகுதியில் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. அங்குள்ள தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக சுங்குவார்சத்திரம் ,வாலாஜாபாத் வழியாக நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ஸ்ரீபெருமந்தூர், ஓரகடம், படப்பை மணிமங்கலம், தாம்பரம், சென்னை , காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் சுங்குவார்சத்திரம் வாலாஜாபாத் செல்லும் சாலையில் கடந்த இரண்டு வருடகாலமாக கழிவுநீர் சாலையிலேயே பெருக்கெடுத்து ஓடுவதால் சுமார் 100 மீட்டர் நீளம் வரை சாலையில் நூற்றுக்கணக்கான பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக அந்த சாலை காணப்படுகிறது.
கழிவு நீர்
இந்த சாலை வழியாகத்தான் பல கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் சுங்குவார்சத்திரம் வந்து படிக்க வேண்டி உள்ளது .அதேபோல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த சாலை வழியாக தான் இரு சக்கர வாகனத்தில் செல்கின்றார்கள். பன்னாட்டு நிறுவனங்களின் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் ஏராளமான பள்ளங்கள் ஏற்பட்டு அதில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் இந்தப் பகுதி வழியே செல்லும் மாணவ மாணவிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகின்றது .
பலர் இந்த கழிவு நீரின் துர்நாற்றத்தாலும் கொசுத்தொல்லைகளாலும் பாதிக்கப்பட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையிலும் ,தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறப்படுகிறது.
Latest Sriperambadur News
அது மட்டுமல்லாமல் இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் அவ்வப்போது வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து எழுந்து செல்லும் அவல நிலையும் கூடிக்கொண்டே செல்கின்றது.
அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் இந்த சாலை வழியாக தினந்தோறும் சென்று வந்தாலும் ஒருவருக்கு கூட இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை என்பது வெட்கக்கேடானது என சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.
நெடுஞ்சாலை துறை
இந்த சாலையை சீரமைக்க கோரி பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் அளித்த அனைத்து மனுக்களும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளது என வேதனையுடன் கூறுகின்றனர்.
அதேபோல் சாலையை சீரமைக்க கோரி அளித்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் எடுக்காமல் கிணற்றில் போட்ட கல் போலயே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.