மோனிகா என்கிற 4 வயது குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டு பரிதாப பலி.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 22, 2024, 1:42:52 PM

காஞ்சிபுரம் மாவட்டம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு உப்பேரிகுளம் தெருவில் கடந்த 1வார காலமாகவே குடிநீர் கலங்கலாக வந்ததாக சொல்லப்படுகிறது.

இந் நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் சங்கர் ரோஜா தம்பதிகளின் மூன்று குழந்தைகளில் மோனிகா என்ற 4 வயதுடைய இரண்டாவது பெண் குழந்தை அதே பகுதியிலுள்ள அங்கன்வாடிக்கு சென்றுவந்த நிலையில் , நேற்று பிற்பகல் அங்கன்வாடியிலிருந்து வீடு திரும்பிய போது தீடிரென நான்கு ஐந்து முறை குழந்தைக்கு வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .

அப்பகுதியிலுள்ள ஆரம்ப நிலையத்திற்கு சென்று போது அங்கு மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் கொடுத்த மாத்திரைகளை குழந்தை அளித்தும் எவ்வித பயனும் இன்றி வாந்தி மற்றும் வயிற்று போக்கு தொடர்ந்து ஏற்பட்டு வந்திருக்கிறது.

இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் குழந்தை சுயநினைவின்றி இருந்ததால் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையெடுத்து உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தையின் உடலானது வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வார காலமாகவே மாநகராட்சியினால் விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக வந்ததால் அதை குடித்து குழந்தை உயிரிழந்தா அல்லது அங்கன்வாடியில் உட்கொண்ட உணவில் ஏற்பட்டதா பிரச்சனையா? என்பது ஆய்வின் முடிவில் தெரியவரும் என கூறப்படுகிறது.

பல நாட்களாக குடிநீர் கலங்கலாக வருவது குறித்து அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் பலருக்கும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் குழந்தையின் இறப்பு எங்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியள்ளது என பகுதி மக்கள் கூறுகின்றனர். 

மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் பகுதியில் ஆய்வு நடத்தி குடிநீரை பரிசோதனைக்கு உட்படுத்தி விரைவில் தெளிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIDEOS

Recommended