- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தரமற்ற முறையில் கோவில் கட்டுவதாக இந்து சமய அறநிலையத்துறை மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு.
தரமற்ற முறையில் கோவில் கட்டுவதாக இந்து சமய அறநிலையத்துறை மீது கிராம மக்கள் குற்றச்சாட்டு.
சண்முகம்
UPDATED: Sep 20, 2024, 7:29:23 PM
கடலூர் மாவட்டம்
ஸ்ரீமுஷ்ணம் அருகே காவாலக்குடி கிராமத்தில் 400 ஆண்டுக்கு மேற்பட்ட ஸ்ரீ மாணிக்க நாச்சியார் கோவில் சிதலமடைந்து இருந்தது.
இந்நிலையில் கோவிலை புதிதாக கட்டித் தர வேண்டும் என தொடர்ந்து கிராம மக்கள் போராடி வந்தனர்.
இந்த கோவிலை இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது 84 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கோவிலை புதியதாக அமைக்கப்படும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டு கோவில் இடித்து பணிகள் துவக்கப்பட்டன.
இந்து சமய அறநிலையத்துறை
ஆனால் கிராம மக்களின் கோரிக்கையின்படி கட்டாமல் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருகிறது. கோவிலை முற்றிலும் இடித்து அகற்றி விட்டு புதிதாக கான்கிரீட் தூண்கள் அமைத்து கட்ட வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் ஒப்புக்காக கட்டுமானங்கள் நடைபெற்று வருவதைப் பார்த்த கிராம மக்கள் கோவிலின் கட்டுமான பணியை தொடரக்கூடாது என கண்டனம் தெரிவித்தனர்.
இதனால் தற்போது பணிகள் எதுவும் நடைபெறாமல் இருக்கிறது. கோவிலுக்கான நிதி 84 லட்ச ரூபாயை முழுவதுமாக செலவிட்டு தரமான கட்டிட அமைப்பாக கோவில் இருக்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.
Breaking News Today In Tamil
ஆனால் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளோ இதற்கு எந்த வித பதிலும் கூறாமல் மௌனம் காத்து வருகின்றனர். இது சந்தேகத்தை எழுப்புவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கோவிலுக்கான நிதியை முழுவதுமாக செலவிட்டு காவாலக்குடி கிராம மக்களின் கோரிக்கையின்படி மட்டுமே கோவில் கட்ட வேண்டும் என வேதனையோடு கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Latest Cuddalore News In Tamil
தற்போது நடைபெறும் கட்டுமான பணி என்பது கட்டி முடிக்கப்பட்டு கோவில் வழிபாடு செய்யும்போது மக்களுக்கு
ஏதேனும் ஆபத்து ஏற்படுத்தும் நிலையிலயே இருக்கும் எனவும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.