ஆத்தூர் ஊராட்சியில் ரூ. 10. 50 லட்சம் ஊழல்.

ராஜ்குமார்

UPDATED: Aug 1, 2024, 1:45:55 PM

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம்

ஆத்தூர் ஊராட்சியில் ரூ 10. 50 லட்சம் ஊழல் செய்ததாக ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊழல்

ஆத்தூர் ஊராட்சியில் 2022-23 ம் நிதி ஆண்டில் வசூல் செய்த வரியினங்களில் கையாடல் செய்ததாக முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் புகார் செய்துள்ளார்.

Latest Thiruvallur District News 

இது தொடர்பாக உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆத்தூர் ஊராட்சியில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பணியாற்றிய ஊராட்சி மன்ற தலைவர் சற்குணம், ஊராட்சி செயல் அலுவலர் சேதுபதி இருவரும் சேர்ந்து ஆத்தூர் ஊராட்சி பொது மக்களிடமிருந்து, வீட்டு வரி, தொழில்வரி , உரிமக் கட்டணம். குடிநீர் கட்டணம், டெண்டர் டெபாசிட் ஆகியவற்றை வசூல் செய்து உள்ளாட்சி கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக தெரியவந்தது.

மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

VIDEOS

Recommended