நாகையில் 100 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கம்.

செ.சீனிவாசன் 

UPDATED: Jul 15, 2024, 7:30:31 AM

முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷா நவாஸ் சட்டமன்ற உறுப்பினர் கூட்ட தொடரில் மாநில கோரிக்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் தொடங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறத்தநாளில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் முதலைமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார் அதனை தொடர்ந்து இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

Latest Government News

அதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தில் மொத்தம் 100 அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் இன்று காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி காக்கழனி ஊராட்சி இரட்டைமதகடி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பங்கேற்று காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

News

காலை உணவாக குழந்தகளுக்கு சர்க்கரை பொங்கல், உப்புமா, சாம்பார் ஆகியவற்றை பரிமாறி குழந்தைகளோடு சேர்ந்து உணவு அருந்தினார். 

முன்னதாக கர்ம வீரர் காமராஜர் திருவுருவப்படத்திற்கும், பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

 

VIDEOS

Recommended