அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில்  15 வயதான 8 சிறுமிகள் மாயம்.

செ.சீனிவாசன் 

UPDATED: Aug 2, 2024, 12:48:40 PM

நாகப்பட்டினம் மாவட்டம் 

நாகை அடுத்த சாமந்தான்பேட்டை பகுதியில் இயங்கி வரும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகமான அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் 11 ஆம் வகுப்பு பயிலும் 8 சிறுமிகள் மாயம்

நாகையில் பள்ளி முடித்துவிட்டு காப்பகம் திரும்ப வேண்டிய குழந்தைகள் இதுவரை வரைல்லை என விடுதி காவலர் கண்ணன் நாகூர் காவல் நிலையத்தில் புகார்

நாகை எஸ்பி ஹர்ஷிங், நாகை டிஎஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் காப்பகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களின் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nagapattinam News Today Tamil

மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தைகள் படித்த பள்ளி, நாகை புதிய பேருந்து நிலையத்தில் வழக்கமாக பேருந்து ஏறும் இடம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே நேரத்தில் 8 குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் நாகூர் சம்பாத்தோட்டம் பகுதியை சேர்ந்த சிமியோன் என்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்

ஒரே நாளில் 8 குழந்தைகள் மாயமாகி இருப்பதால், குழந்தைகள் கடத்தப்பட்டு உள்ளார்களா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வந்த நிலையில் நாகை ஏடிஎஸ்பி மகேஷ்வரி தலைமையிலான போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் நாகூர் காவல் நிலைய ஆய்வாளர் சதிஷ்குமார் சென்னையில் குழந்தைகளை மீட்டனர்

Latest Nagapattinam News & Live Update

அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் வாடர்ண் திட்டியதால் 8 குழந்தைகள் சென்னை சென்றதாக தகவல்

சென்னையில் உள்ள பவித்ரா என்பவரின் வீட்டில் குழந்தைகளை நாகூர் போலீசார் மீட்டனர்

இன்று மாலை நாகை அழைத்து வர உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளனர்.

அவர்களுக்கு முழு கவுன்சிலிங் வழங்கப்படும் என நாகை எஸ்பி ஹர்சிங் தெரிவித்துள்ளார்.

காப்பகத்தில் உள்ள ஊழியர்களுக்கும் கவுன்சிலிங் கொடுத்தால் பிற்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

 

VIDEOS

Recommended