• முகப்பு
  • குற்றம்
  • 2000 ஏக்கர் தீட்சிதர்கள் விற்றதாக அரசு தரப்பின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது

2000 ஏக்கர் தீட்சிதர்கள் விற்றதாக அரசு தரப்பின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது

சண்முகம்

UPDATED: Sep 21, 2024, 10:53:16 AM

சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோயில், அரசு கோயில் நிலங்கள் தனி வட்டாட்சியர் பராமரிப்பில் உள்ளது என பொதுதீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நடராஜர் கோயில் வக்கீல் ஜி.சந்திரசேகர் மற்றும் கோயில் கமிட்டி செயலாளர் உ.வெங்கடேச தீட்சிதர் ஆகியோர் நேற்று மாலை நிருபர்களை சந்தித்து பேட்டி கொடுத்தனர்... அதில் கூறியதில் 

சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமாக கணக்கு வழக்குகளை ஆய்வு செய்யவும் சட்டவிரோதமான கட்டுமான பணிகளை நிறுத்தவும்.

இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்த நீதி பேராணை பல்வகை மனுக்களில் உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு முன் 05.09.2024 விசாரணையின் தொடர்ச்சியாக 19.09.2024 அன்று நடைபெற்றது. 

ஸ்ரீ சபாநாயகர் கோயில் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹரிசங்கர், கோயில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வர்ஷா சந்திரசேகர் ஆஜராகி முந்தைய விசாரணை தேதியில் உத்தரவுவிட்டப்படி சீலிட்ட உறையில் 2014 முதல் 2024 வரை ஸ்ரீ சபாநாயகர் கோயில் வரவு செலவு கணக்குகளின் விபரங்களை நீதிமன்றத்தில சமர்ப்பித்தார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயில்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உறுதிமொழி பத்திரத்தில் கோமிலின் பாரம்பரியமாக அறக்கட்டளைகள் மூலம் தினசரி பூஜை மாத பூஜை விழாக்கள் நடைப்பெற்று வருகிறது என்ற விபரத்தையும் கோயில் பராமரிப்பு செலவிற்கு தீட்சிதர்கள் தாங்கள் பெறும் வருமானத்தைக்கொண்டு எவ்வாறு பங்களிக்கிறார்கள் என்பதையும் வரவு செலவு கணக்குகளில் அவைகள் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும்,

கோயில் நிலங்கள் அரசாணை எண் 835/1976-ன் படி தனி வட்டாட்சியர் (கோயில் நிலங்கள்) பராமரிப்பிலும் உள்ளது என்றும் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள கோயில் நிலங்களிலிருந்து கோயிலுக்கு மின்கட்டணத்திற்கு டிராஃட் மூலம் TANGETCO தொகைகள் நேரடியாக அவ்வவ்போது மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த தொகைகள் 3ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களிலிருந்து பெறப்படும் வருமானம் மிக குறைந்தபட்ச அளவிலேயே வரும் செய்யப்படுகிறது என்றும் குறிப்பிட்டு மின் கட்டணங்கள் கட்டுவதில் ஏற்படும் பாக்கித்தொகை தற்போது சிட்டி யூனியன் வங்கி மூலம் நன்கொடை மூலம் செய்யப்படுகிறது.

அதுவும் போகவுள்ள பாக்கியை பொது தீட்சிதர்கள் தான் தங்கருக்குள் வசூல் செய்து ஈடுகட்டி வருகிறார்கள் என்பதையும் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

இந்நிலையில் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்திலிருந்து தகவல் அறியும் சட்டத்திலிருந்து பெறப்பட்ட பதில் படி 1,000 ஏக்கரிலிருந்து தான் மிக குறைந்த சுமார் 93,000 ரூ. மின் கட்டணத்திற்காக கோயில் சார்பாக அரசு செலுத்தியுள்ளது என்று சிறப்பு அமர்விற்கு முத்த வழக்கறிஞர் ஹரிசங்கர் சுட்டிக்காட்டியவுடன் அரசு தரப்பு வழக்கறிஞர் 2,000 ஏக்கர் தீக்ஷிதர்களால் விற்கப்பட்டது என்று எந்தவித ஆவணங்களும் தாக்கல் செய்யப்படாமல் அபாண்டமான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.  

பொது தீக்ஷிதர்கள் தரப்பில் நீதிமன்றம் உத்தரவு இட்டப்படி 5 வருட பதிவேட்டுகளை சீலிட்ட உறையில் தாக்கல் செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றிய பொதுவெளியில் பொது தீட்சிதர்கள் பற்றிய அபாண்டமான குற்றச்சாட்டு வெளியிடப்பட்டதால் உண்மை நிலையை தெரிவிக்க இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டரை வருடமாக பொது தீக்ஷிதர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகள் ஆதாரமில்லாமல் அரசுதரப்பின் உதவியுடன் ஒரு சில கோயில் எதிர்ப்பாளர்களின் ஏற்பாட்டின் பேரில் வெளியிடப்பட்டு வருகிறது.

குறிப்பாக நீதிமன்ற நடவடிக்கை பற்றி தொடர்ந்து தவறான கருத்துக்கள் பொது வெளியில் வெளியிடப்பட்டு வருவது மிகவும் கண்டணத்துக்குரிய சட்டவிரோத நடவடிக்கையாகும்.

Latest Chidambaram News Today In Tamil 

நீதிமன்றத்தின் விசாரணை நடவடிக்கை நிலுவையிலுள்ளபோது அதற்கிணையாக அவதூறான பொய்யான செய்திகளை திடடமிட்டு பொதுவெளியில் வெளியிட்டு வருவதை நீதிமன்றங்கள் அவ்வவ்போது கண்டித்தும், அவ்வாறு செய்யக்கூடாது என்று உத்தரவும் இட்டு வருகிறது.

இதுவரை நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து தவறான வகையில் பொதுவெளியில் வெளியிடப்பட்டு வந்த போதிலும், தற்போது உச்சக்கட்டமாக பொது தீட்சிதர்களை களங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்தவித அடிப்படை ஆதாரமுமில்லாமல் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை பொதுவெளியில் வெளியிட்டதால் தீட்சிதர்களுக்கு ஈடுசெய்யமுடியாத அளவிற்கு களங்கமும் நற்பெயருக்கு பாதகமும் ஏற்படுகிறது என்ற மறுக்கமுடியாத உண்மையை பொது வெளியில் தெரிவிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் தற்போது எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி பொது தீக்ஷிதர்கள் கோயில் நிலங்களில் 2,000 ஏக்கர் விற்கப்பட்டதாக மறுப்பு அறிக்கை வெளியிடவில்லையென்றால் பொது தீட்சிதர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுவிடும்.

இது சம்பந்தமான சிறிய சட்ட விளக்கமும் அளிக்கப்படுகிறது. கோயில் நிலங்கள் தனிவட்டாட்சியர் பராமரிப்பில் அரசாணை எண் 835/1976-ன் படி 3,000 ஏக்கர் நிலங்களிலிருந்து தொகை வசூல் செய்யப்பட்டு மின் கட்டணத்திற்காக மின்வாரியத்திற்கு நேரடியாக தொகைகள் அனுப்பப்பட்டு வரப்படுகிறது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் அறியும் சட்ட ஆர்வலர் எஸ்.ஸ்ரீகுமார் என்பவர் சிறப்பு அமர்வு நீதிமன்றத்தின் முன் நீதிமன்ற பேராணை பல்வகை மனு எண்கள் 6972, 6973, 6974 of 2023 மனு செய்து சபாநாயகர் கோயில் நிலங்களிலிருந்து பெறப்படும் வசூல் தொகை மிக சொற்பமாக உள்ளது என்று தான் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்ற கணக்குகளை எடுத்துரைத்து அந்த கணக்குகளை முறைப்படி CAG அமைப்புகள் மூலம் தணிக்கை செய்யவேண்டும் என்றும் தெரிவித்து மனு செய்துள்ளார் அந்த மனுக்கள் நிலுவையுள்ளது.

Breaking News Today In Tamil 

இந்த விபரங்களின் அடிப்படையில் தான் பொது தீட்சிதர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் இந்த உண்மை நிலை தெரிவிக்கப்பட்டது.

பதிவுத்துறை சட்டத்தின் பிரிவு 22(ஏ)ன் படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை பதிவு செய்வதற்கு தடையுள்ளது.

இந்த தடையை மீறி 2,000 ஏக்கர் பதிவு செய்வதற்கு நிலத்தை கோயிலுக்கு எழுதி வைத்த நபரோ அல்லது வாரிசுகளோ மூன்றாவது நபருக்கு விற்க இயலாது எந்த வகையில் பார்த்தாலும் தீ்ட்சிதர்கள் எவரும் 2,000 ஏக்கரை அரசு துறை தெரியாமல் பதிவு செய்வதற்கு வாய்ப்பே இல்லை.

தொடர்ந்து இவ்வாறான பொது தீட்சிதர்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களை இந்து சமய அறநிலையத்துறை செய்தால் அதற்கு உரிய வகையில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பதையும் இந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended