- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்.
சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்.
கார்மேகம்
UPDATED: Aug 29, 2024, 7:50:39 AM
இராமநாதபுரம்
சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தெரிவித்துள்ளார்
( விநாயகர் சதுர்த்தி விழா )
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது நீர் நிலைகளை பாதிக்காத வகையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது அந்த விதிமுறைகள் ( www.tnpcb.gov.in ) என்ற இணையதளத்தில் உள்ளது
அதன்படி ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடபட்டுள்ள இடங்களில் மட்டும் விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச் சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் அதன்படி களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்படும்
Latest District News
பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிளாஸ்டிக் தெர்மாக்கோல் சிலைகளை கரைக்க அனுமதி இல்லை சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு பெயிண்ட் உள்ளிட்ட ரசாயனங்கள் பயன் படுத்தக் கூடாது அதற்கு மாற்றாக நீரில் கரையக்கூடிய இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்
( சிலைகள் கரைக்கும் இடங்கள் )
விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிட்டுள்ள கீழ் கண்ட இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி கரைக்க வேண்டும்
Breaking News
அதன்படி பரமக்குடி பெருமாள் கோவில் வைகை ஆறு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரை மண்டபம் இந்திரா நகர் கடற்கரை ராமநாதபுரம் நொச்சி வயல் ஊருணி தேவிபட்டினம் நவபாசனம் கடற்கரை நரிப்பையூர் கடற்கரை கமுதி செட்டி ஊருணி வடக்கு பாம்பன் பாம்பன் சுவாமி கோயில் கடற்கரை ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் மோர் பண்ணை கடற்கரை அழகன்குளம் கடற்கரை முத்துப்பேட்டை கடற்கரை தோப்பு வலசை கடற்கரை சின்ன ஏர்வாடி கடற்கரை ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்
Ramanathapuram News
( சுற்றுச் சூழலை பாதிக்காத வாறு ) ராமநாதபுரம் மாவட்டத்தில் ஈர நிலமாக வரையறுக்கப்பட்டுள்ள மன்னார் வளைகுடா கடல் உயிர்க் கோள காப்பகம் காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம் சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களில் கண்டிப்பாக சிலைகளை கரைக்க அனுமதி கிடையாது
இது தொடர்பான விபரங்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் விதிமுறைகளை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச் சூழல் பாதிக்காதவாறு கொண்டாடும் படி ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தெரிவித்துள்ளார்