ஆற்றங்கரை முகத்துவார பகுதியை ஆழப்படுத்த கோரிக்கை 

கார்மேகம்

UPDATED: Aug 14, 2024, 10:03:38 AM

இராமநாதபுரம்

அழகன்குளம் அருகே ஆற்றங்கரை கிராமத்தில் கடல் நீறும் வைகை நீறும் சேரும் முகத்துவார பகுதி உள்ளது இந்த கடல் பகுதி வழியாக தினமும்  இக்கிராமத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள்‌ நாட்டுப்படகு பைபர் படகு சிறிய வத்தைகளில் மீன்பிடிக்க‌ சென்று வருகின்றனர்

இந்த கடல் பகுதி அடிக்கடி மணலால் மூடப்படுவதால் மீன்பிடிக்க செல்லும் படகுகள் மணலில் சிக்கித்  தவிக்கும் நிலை உள்ளது 

மேலும் முகத்துவார பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மீன்வளத்துறை மூலம் பல கோடி நிதியில் இந்த கடல் பகுதியை பெயரளவிற்கு தூர்வாரப்பட்டு ஒரு பகுதியில் மட்டும் பாரங்கற்களால் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது

அரசு நிதியில் கடல் முகத்துவார பகுதியை முழுமையாக தூர்வாராததாலும்‌ தடுப்புச் சுவரை இருபுறமும் கட்டாததாலும் கடல் பகுதி தொடர்ந்து மணலால் மூடப்பட்டு வரும் நிலை உள்ளது

Latest District News in Tamil

இதனால் இவ்வழியே மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர் எனவே இந்த பகுதியில் மீன்பிடிக்க செல்ல வசதியாக ஆழமாக தூர்வாரி மணலை அப்புறப்படுத்தவும் முகத்துவார கடல் பகுதியை மண் மூடுவதை தடுக்க தடுப்புச் சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

இது குறித்து மீனவர் ஒருவர் தெரிவிக்கையில் இந்த கடல் முகத்துவார பகுதிதான் எங்கள் வாழ்வின் ஆதாரம் அதனால் முகத்துவார பகுதியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றார். 

 

VIDEOS

Recommended