வெடி பொருட்களை கொண்டு சென்ற மூன்று பேர் கைது

சாம் பென்னட்

UPDATED: Apr 15, 2024, 2:33:45 PM

ஈரோடு மாவட்டம் டி என் பாளையம் அருகே உள்ள கே என் பாளையம் வனத்துறை சோதனை சாவடியில் பங்களாபுதூர் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் வந்தனர். உடனே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பையை வாங்கி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் 18 டெட்டனேட்டர்கள் அதை வெடிக்க பயன்படுத்தும் 15 மீட்டர் ஒயர் ஆகியவை இருந்தன.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் டிஎன் பாளையம் அருகே உள்ள வாணிபுத்தூரை சேர்ந்த அருள் குமார் வயது 22 ,பாபு 45, பொள்ளாச்சி தொண்டாமுத்தூர் வரை சேர்ந்த நந்தகுமார் 24 ஆகியோர் என்பதும்,

அவர்கள் தனியார் குவாரியில் விவசாயக் கிணற்றில் பயன்படுத்துவதற்காக வெடிப்பொருட்களை வாங்கி செல்வதாகவும் தெரிவித்தனர்.

ஆனால் முறையான பாதுகாப்பு இல்லாமல் வெடிபொருட்களை கொண்டு சென்றதாக அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேர் கைது செய்தனர்.

மேலும் வெடி பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன.

VIDEOS

Recommended