• முகப்பு
  • லஞ்சம்
  • காஞ்சிபுரம் மாநகராட்சி முன்னாள் நகரமைப்பு பிரிவு ஆய்வாளர் வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

காஞ்சிபுரம் மாநகராட்சி முன்னாள் நகரமைப்பு பிரிவு ஆய்வாளர் வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

லட்சுமி காந்த்

UPDATED: Aug 6, 2024, 8:06:40 AM

காஞ்சிபுரம் மாநகராட்சி

அலுவலகத்தில் நகர அமைப்பு பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்த சியாமளா என்பவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக வந்த புகாரை அடுத்து காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு, ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வழக்குப்பதிவு செய்து உள்ள நிலையில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசார் காஞ்சிபுரம் வீட்டில் காலை 6.30 மணி முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்சம்

இவர் கடந்த ஆண்டு நெல்லை பகுதியில் களக்காடுக்கு பணி மாறுதலாகி சென்று தற்போது பணி மாறுதலாகி மீண்டும் செய்யார் நகராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக வந்த புகாரையெடுத்து 6-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையினை மேற்கொண்டு வருவதோடு அவரது வீடு மற்றும் சொத்து ஆவணங்கள் குறித்த சோதனையினை நடத்தி வருகின்றனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாரின் சோதனையின் முடிவுலேயே சொத்து கணக்கீடு செய்யும் பணிகளானது நடைபெறவுள்ள நிலையில் இச்சோதனையின் முடிவிலேயே என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது, பணம் எவ்வளவு கைப்பற்றப்பட்டது என்பது குறித்தான தகவல்கள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் கட்ட விசாரணையில், ஏராளமான ஆவணங்கள் வங்கியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கையில் இருப்பு குறைவாக உள்ளதாகவும் தெரிய வருகிறது.

 

VIDEOS

Recommended