• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஸ்ரீமுஷ்ணத்தில் மழை காரணமாக டிபிசி நெல் குடோனில் தண்ணீர் புகுந்த அவல நிலை அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாரா ?

ஸ்ரீமுஷ்ணத்தில் மழை காரணமாக டிபிசி நெல் குடோனில் தண்ணீர் புகுந்த அவல நிலை அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாரா ?

சண்முகம்

UPDATED: Aug 7, 2024, 7:07:58 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம்

ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பாலூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டன

இந்நிலையில் மேலப்பாலூர் கிராமத்தைச் சுற்றி பல ஊர்களில் இருந்து விவசாயிகள் அறுவடை செய்து ஆண்டுதோறும் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்

இந்நிலையில் நேற்று கனமழை காரணமாக டிபிசி நெல் குடோனில் தண்ணீர் புகுந்து நெல் மூட்டைகள் அனைத்தும் நாசமான நிலையில் இதனை அரசுக்கு தெரியாமல் நெல் மூட்டைகளை அடியில் வைத்து நேரடியாக விருத்தாச்சலம் குடோனுக்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.

Latest Cuddalore News & Live Updates

இதனால் நெல் முளைக்கும் அவல நிலை ஏற்படுவதால் இதற்கு அரசுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது 

அதோடு விவசாயத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் டி பி சி நெல் குடன்களுக்கு தார்ப்பாய் மற்றும் நெல் அடுக்கி வைப்பதற்கு சேர் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதனை பயன்படுத்தாமல் டிபிசி விற்பனையாளர்கள் அலட்சியம் காட்டி வருவது ஏன் என சமூக ஆர்வலர்கள் பல்வேறு குற்றச்சாட்டை முன் வைப்பது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended