திருவள்ளூரில் வீட்டைச் வீட்டைச் சுற்றி சூழ்ந்த மழை நீர் மக்கள் தவிப்பு.

சுரேஷ் பாபு

UPDATED: Oct 16, 2024, 8:39:05 AM

திருவள்ளூர் மாவட்டம்

காக்களூர் ஊராட்சியில் உள்ள பூந்தோட்ட தெருவில் தாமரைக் குளம் போல் காட்சியளிக்கும் பகுதி மழையுடன் கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு.

காக்களூர் பூந்தோட்டம் தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் 

மழைக்காலம் என்றாலே அந்த பகுதி மழைநீருடன் கலந்து கழிவுநீராக காணப்பட்டு வருகிறது அந்தப் பகுதி, பலமுறை மாவட்ட ஆட்சியரிடமும் வட்டாட்சியிடமும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் 

அப்பகுதி மக்களின் வீடுகளில் பாம்பு பூரான் தவளை விஷ ஜந்து தேள் உள்ளிட்டவைகள் வீட்டுக்குள் வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

டெங்கு காய்ச்சல் 

அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 5 க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் குளம் போல தேங்கி நிற்கும் தண்ணீரால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுவரை ஊராட்சி மன்ற தலைவரும் வார்டு உறுப்பினர்களும் அந்தப் பகுதியில் வந்து ஆய்வு மேற்கொள்ளவில்லை என்று கிராம மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது 

மழைக்காலம் என்றாலே ஒரு தாமரைக் குளம் போல எங்கள் பகுதி காணப்பட்டுள்ளது என்று பொதுமக்களின் புகாராக உள்ளது. 

மழை நீர்

மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக பல நடவடிக்கைகள் எடுத்து வரக்கூடிய மாவட்ட நிர்வாகம் இது போன்ற தொடர்ந்து பல வருடங்களாக நின்று கொண்டிருக்கக்கூடிய கழிவுநீர் மற்றும் குளம் போல் காட்சியளிக்கும் இந்த மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் பலத்த மழை பெய்தால் கண்டிப்பாக பல உயிர் சேதங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

VIDEOS

Recommended