• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றால் சாலையில் வைக்கப்பட்டுள்ள இரும்பு பேரிகார்டுகள் மற்றும் சிக்னல் விளக்குகள் கீழே விழுந்ததால் பரபரப்பு.

ஸ்ரீபெரும்புதூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றால் சாலையில் வைக்கப்பட்டுள்ள இரும்பு பேரிகார்டுகள் மற்றும் சிக்னல் விளக்குகள் கீழே விழுந்ததால் பரபரப்பு.

லட்சுமி காந்த்

UPDATED: Nov 30, 2024, 7:54:04 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் காரணமாக தற்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 

இதனால் சாலைகளின் நடுவே மற்றும் குறுக்கே வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பான்கள் கீழே விழுந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிக்னல் லைட்டும் கீழே விழுந்துள்ளது.

இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தோடு வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். குடை பிடித்தவாறு நடந்து செல்கிறவர்களின் குடைகள் காற்றின் வேகம் தாங்காமல் கிழிகின்றது.

மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

தொடர் கனமழையால் மழை நீர் சாலைகளின் பெருக்கெடுத்து ஓடுவதோடு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வருகிறது. 

தற்போது அதிக காற்றுடன் பெய்து வரும் கனமழையால் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

VIDEOS

Recommended