உல்லாசத்துக்கு சென்றபோது வாலிபரிடம் தங்க நகையை பறிகொடுத்த பெண் என்ஜினீயர்.
கார்மேகம்
UPDATED: Nov 10, 2024, 8:54:44 AM
சென்னை
உல்லாசத்துக்கு சென்றபோது வாலிபரிடம் தங்க நகையை பெண் என்ஜினீயர் பறிகொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார் .
( ஆண் விபச்சாரம் )
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப விபச்சார தொழிலும் ஹைடெக்காக மாறி உள்ளது
ஆன்லைனில் சில பக்கங்களுக்கு சென்று பார்த்தால் கவர்ச்சி உடையில் அழகிகள் படங்களுடன் டேட்டிங் செயலிகள் அணிவகுக்கின்றன இவ்வாறு ஆன்லைன் விபச்சாரம் சத்தம் இல்லாமல் அரங்கேறி வருகிறது தங்களுக்கு ரகசிய தகவலின் பேரில் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்
Call Boy
பெண்கள் மட்டுமே விபச்சார தொழிலில் தள்ளப்பட்டிருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மேலை நாடுகளை போன்று ஆண்கள் விபச்சாரம் ( கால் பாய்) என்ற மோசமான கலாச்சாரம் தலைதூக்கி வருகிறது
கட்டுமஸ்தான உடல் அமைப்புடன் வாலிபர்களின் புகைப்படத்துடன் ( கால் பாய்) டேட்டிங் செயலிகளும் ஆன்லைனை ஆக்கிரமிக்க தொடங்கின கை நிறைய பணம் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் சிலர் கால்பாயாக வலம் வருகிறார்கள் கரும்பு தின்ன கூலியா ? என்ற மனநிலையிலும் இந்த தொழிலுக்கு சில இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
சென்னையில் கால் பாயாக வலம் வந்த பொறியாளர் ஒருவரை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்
Dating App
( தங்கும் விடுதியில் உல்லாசம் )
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர் கால் பாய் டேட்டிங் செயலியில் என்னதான் இருக்கிறது பார்க்கலாம் ? என்ற ஆசையில் அந்த செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்துள்ளார்
உள்ளே சென்று பார்த்த போது அதில் இருந்த வாலிபர் மீது அவருக்கு மோகம் ஏற்பட்டுள்ளது உடனடியாக குறிப்பிட்ட வாலிபரை செல்போன் எண்ணில் அழைத்து பேசி உள்ளார் அந்த கால் பாய் வாலிபர் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளேன் வாருங்கள் என்று அழைக்கவே அந்த பெண் என்ஜினீயர் ஏக்கத்தோடு சென்றிருக்கிறார்.
( போலீசில் புகார் )
வாலிபருடன் உல்லாசம்
அனுபவித்து விட்டு வீட்டுக்கு சென்ற போது பெண் பொறியாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி மாயமாகி இருந்தது கால் பாய் மோகத்தில் நகையை பறிகொடுத்து விட்டோமே ? இந்த விஷயம் வெளியே தெரிந்தால் மானம் போய்விடுமே ? என்று மனதுக்குள் பெண் என்ஜினீயர் ஏங்கி உள்ளார்
இருப்பினும் தங்கத்தின் விலையை நினைத்துப் பார்த்து பதற்றத்தை போக்கி திருவல்லிக்கேணி போலீஸ் நிலைய படியேறினார் அங்கு தயக்கத்துடன் புகார் மனுவை அளித்தார் புகார் மனுவில் நடந்த விவரங்களையும் குறிப்பிட்டு டேட்டிங் செயலி மற்றும் கால் பாயாக வந்த வாலிபரின் செல்போன் எண் ஆகிய விவரங்களையும் தெரிவித்தார்
இந்த புகார் மனு மீது போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் கால் பாயாக வந்து நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.