• முகப்பு
  • குற்றம்
  • கும்மிடிப்பூண்டி அருகே பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் விவிஐபி தரிசனத்திற்கு 5000 ரூபாய் வரை கெடுபிடி

கும்மிடிப்பூண்டி அருகே பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் விவிஐபி தரிசனத்திற்கு 5000 ரூபாய் வரை கெடுபிடி

L.குமார்

UPDATED: Apr 16, 2024, 7:52:58 PM

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இதனால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நேர்த்திக்கடனை நிறைவேற்றவும், வேண்டுதல்களை முன்வைத்தும் பக்தர்கள் காவடி எடுத்தும், நடை யாத்திரை மேற்கொண்டும் வருகின்றனர். 

கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகத்தின் சார்பாகவும் காவல்துறை சார்பாகவும் பல்வேறு விதிமுறைகள் கையாலப்படுகிறது.

ஆனால் சுவாமியை பார்க்க நினைக்கும் பணம் படைத்தவர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கிச் செல்லாத வண்ணம் வி வி ஐ பி தரிசனத்திற்காக 2000 முதல் 5000 ரூபாய் வரை பணம் கொடுத்து செல்போன் மூலம் ரகசிய டோக்கன்களை பெற்றுக் கொள்கின்றனர்.

இந்த டோக்கனை காட்டினால் போதும் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட குழுவினர் டோக்கன் வைத்திருப்பவர்களை அவுட் கேட் வழியாக உள்ளே அழைத்துச் சென்று சிறப்பு தரிசனத்தை காண்பிக்கின்றனர்.

இவ்வாறு அழைத்துச் செல்பவர்களை காவல்துறையினர் சல்யூட் அடித்து அனுப்பி வைக்கின்றனர். இதனால் பல நூறு கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. 

இது தொடர்பாக இந்து அறநிலைத்துறை சோளிங்கர் உதவி ஆணையர் ஜெயா, ஆய்வாளர் விவேக், திருவாரூர் செயல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோரிடம் பக்தர்கள் பலமுறை புகார் தெரிவித்ததாக கூறப்படும் நிலையில் இந்த வி வி ஐ பி தரிசனம் முடிவுக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

 

  • 6

VIDEOS

Recommended