• முகப்பு
  • குற்றம்
  • தோண்ட தோண்ட புதையல் என்பதுபோல் காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப் பகுதியிலேயே காட்டன் சூதாட்டம், போதை வஸ்துகள் மற்றும் லாட்டரிகள் .

தோண்ட தோண்ட புதையல் என்பதுபோல் காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப் பகுதியிலேயே காட்டன் சூதாட்டம், போதை வஸ்துகள் மற்றும் லாட்டரிகள் .

லட்சுமி காந்த்

UPDATED: Nov 12, 2024, 8:52:20 AM

காஞ்சிபுரம் மாவட்டம் 

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான கோயில்கள் உள்ளதாலும், பட்டு சேலை கடைகள் உள்ளதாலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. 

வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் தொழிலாளர்களுக்கும், ஹான்ஸ் கூல் லிப் விமல் வி1 சுவாசத் போன்ற போதை வஸ்துகளை விற்பனை செய்து அதிக லாபம் பார்த்தனர். அதுமட்டுமல்லாமல் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் , மற்றும் காட்டன் சூதாட்டம் போன்றவற்றின் மூலமாகவும் லாபம் அடைந்து வந்தனர் .

Latest Crime News Today In Tamil 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் , ஆலடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரகாஷ், கருகிளில் அமர்ந்தவள் கோவில் தெரு சேர்ந்த புவியரசன், மற்றும் சுரேஷ் உள்ளிட்ட 4 நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 450 போதை வஸ்துகளையும், வெளி மாநில லாட்டரி சீட்டுகள் மற்றும் காட்டன் சூதாட்டம் ஆகியவற்றை கைப்பற்றி சிறையில் அடைக்கப்பட்டனர்.

நேற்று பெப்சி டீலர் என்ற போர்வையில் போதை வஸ்துகளை விற்பனை செய்து வந்த குமார் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இதே பகுதியில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட நான்கு பேர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

VIDEOS

Recommended