கவியரசு கண்ணதாசன் பிறந்த தினம் இன்று

இளையராஜா

UPDATED: Jun 24, 2024, 4:07:14 AM

வாழும்போது வரலாறு படைத்துக்‍ கொண்டிருக்‍கும் மாமனிதர்கள் இறந்தபின் மரணத்தையும் வென்று மக்‍கள் மனங்களில் ஈரமான நினைவுகளாக தினம் தினம் உலா வந்துகொண்டிருக்‍கிறார்கள்.

அப்படி உலா வருகிற, தமிழர்களின் உதிரத்தோடு கலந்துவிட்ட உன்னதக் கவிஞன்தான் கண்ணதாசன்.

அவரின் இயற்பெயர் முத்தையா, ஜூன் 24 1927 ஆம் ஆண்டு பிறந்தார், அவரின் பெற்றோர்கள் சாத்தப்பன் விசாலாட்சி அம்மையார், அவர் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார்.

சிறுவயதிலேயே எழுத்தின் மீது தீராத ஆர்வத்தால் பத்திரிகைகளில் கதை எழுத வேண்டும் என்பது கனவாக இருந்தது.

தனது 16 வயதில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு சென்னைக்கு வந்தார்.

கிரகலட்சுமி என்ற பத்திரிகையில் நிலவொளியிலே என்ற கதை முதன்முதலாக வெளிவந்தது.

1944 இல் தனது 17 வயதில் திருமகள் என்ற பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பு கிடைத்தது

1947 இல்  மாடர்ன் தியேட்டர்ஸின் சண்டமாருதம் பத்திரிகை ஆசிரியராக பணிபுரிந்தார்.

திரைப்படங்களுக்கு பாட்டு எழுதும் ஆசையில் கோயம்புத்தூர் சென்றார்.

மந்திரகுமாரி என்ற படத்திற்கு வசனம் எழுத சென்றபோது கலைஞர் கருணாநிதி உடன் நட்பு கிடைத்தது

1953 ஆம் ஆண்டு திமுக நடத்திய கல்லக்குடி போராட்டத்தில் சிறை சென்றார்.

தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார்

சேரமான் காதலி படைப்புக்காக 1980 இல் சாகித்திய அகாடமி விருது கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது

அமெரிக்காவில் தமிழ் சங்க விழாவிற்கு 1981 ஜூலையில் சென்றபோது அங்கு நெஞ்சுவலி ஏற்பட்டது தீவிர சிகிச்சையில் இருந்த கண்ணதாசன் அக்டோபர் 17 1981 அன்று இரவு 10:45க்கு மறைந்தார்

காலத்தால் மறக்‍க முடியாத காவியங்களைத் தன் திரைப்படப் பாடல்களில் கரைத்து, மக்‍களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட மாபெரும் கவிஞர் கண்ணதாசன்.

 

VIDEOS

Recommended