• முகப்பு
  • சென்னை
  • குன்றத்தூர் முருகன் கோவில் திருவிளக்கு பூஜையில் பாரபட்சம்

குன்றத்தூர் முருகன் கோவில் திருவிளக்கு பூஜையில் பாரபட்சம்

S.முருகன்

UPDATED: Apr 29, 2024, 6:15:02 AM

குன்றத்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது மலை குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

 முருகன் கோவில் சித்திரை திருநாளை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

ஆண்டுதோறும் சித்திரை திருநாளை முன்னிட்டு கோவிலில் 508 திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம் இந்த நிலையில் முருகன் கோவில் வளாகத்தில் 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றதையடுத்து குன்றத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.

குன்றத்தூர் முருகன் திருவிளக்கு பூஜையில் பட்டியலின மக்களுக்கு பாரபட்சம் 

இதையடுத்து குன்றத்தூர் முருகன் கோவிலை சுற்றியுள்ள நத்தம் பகுதியை சேர்ந்த பட்டியலின மக்கள் மற்றும் இந்த பகுதியைச் சேர்ந்த அதிமுக நகர மன்ற உறுப்பினர்களுக்கு திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாகவும்

பட்டியலின மக்கள் என்பதால் கோவில் அதிகாரிகளும், அறங்காவலர்களும் பாரபட்சம் காட்டுவதாக கோவில் வளாகத்தின் முன்பு பேனர் வைத்து அப்பகுதி மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

 

இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் கோவில் கும்பாபிஷேகம் நடந்


தது முதல் இந்த பகுதி மக்களை கோயில் நிர்வாகம் வருவதாகவும் குற்றம் சாட்டினார்கள்.

இதுகுறித்து திங்கட்கிழமை கோவில் அதிகாரிகளுடன் சம்பந்தப்பட்ட பொதுமக்களுடன் சமசர பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

  • 9

VIDEOS

Recommended