காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் செயலிழந்த பல் மருத்துவப் பிரிவு.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 16, 2024, 7:48:29 AM

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற மற்றும் உள் நோயாளிகள் செலவில்லாமல் இலவசமாக அரசு மருத்துவமனையில் நல்ல சிகிச்சை பெறலாம் என்று நோக்கத்தில் வந்து இங்கு எந்த விதமான முன்னேற்ற சிகிச்சையும் கிடைக்க பெறாததால் ஏமாந்து தனியார் மருத்துவமனையல நாடி செல்கின்ற நிலை தொடர்கிறது.

அரசு தலைமை மருத்துவமனையில் சுமார் 25க்கும் மேற்பட்ட பிரிவுகள் இயங்கி வருகின்றது. குறிப்பாக இருதயம் சம்பந்தப்பட்ட பிரிவு, நரம்பியல் பிரிவு, நீரிழிவு பிரிவு உள்ளிட்ட மருத்துவப் பிரிவுகளுக்கு நீண்ட நாட்களாக மருத்துவர்கள் இல்லாததால் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கோ, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சை பெரும் அவல நிலை உள்ளது. இப்படி பின் தங்கிய நிலையில் அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகின்றது .

இந்நிலையில் இன்று காலை சுமார் 11: 15 மணியளவில் பல் சிகிச்சை பிரிவிற்க்கு சென்ற தோழர் ஸ்ரீதர் என்பவர் அந்தப் பிரிவில் மருத்துவர் உள்ளிட்ட எவருமே பணியில் இல்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.

சுமார் 12 மணி வரையில் பல் வலியுடன் காத்திருந்தவர் , இனிமேல் இங்கு வேலைக்கு ஆகாது என தெரிந்து கொண்ட பின்னர் தனியார் பல் மருத்துவமனையை நோக்கி புலம்பி கொண்டே சென்றார். 

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பல் மருத்துவப் பிரிவு அனாதையாக உள்ளது என வாட்ஸ் அப்பில் ஸ்ரீதர் பதிவிட்டதால் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வீடியோ பரவி வருகிறது. 

விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் சுகாதாரத்துறை எந்தவிதமான முன்னேற்றத்தையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பணிபுரிந்து வருகின்ற சிவில் சர்ஜன் மீனாட்சி அவர்கள் 15 நாள் மெடிக்கல் லீவில் சென்று விட்டதால் மாற்று பணிக்கு கூட இங்கு ஆள் இல்லை தற்போது பல் மருத்துவம் பார்க்க எந்த ஒரு மருத்துவரும் இல்லை என்பது மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை காண்பிக்கின்றது.

 

VIDEOS

Recommended