• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • குவைத் தீ விபத்தில் சிக்கியவர் உயிரோடு நாடு திரும்ப வேண்டும் என்ற ஏக்கத்தோடு அவரது குடும்பத்தினர் காத்திருப்பு.

குவைத் தீ விபத்தில் சிக்கியவர் உயிரோடு நாடு திரும்ப வேண்டும் என்ற ஏக்கத்தோடு அவரது குடும்பத்தினர் காத்திருப்பு.

JK

UPDATED: Jun 13, 2024, 6:13:32 PM

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றும் நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்தவர் ஜான்சாமுவேல் இவரது மகன்  ராஜூஎபினேசன். 

ஜான் சாமுவேல் குவைத் நாட்டில் உள்ள என்.பி.டி.சி நிறுவனத்தில் கடந்த 12வருடமாக கண்டெய்ணர் வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், குணசீலன், சம்பத்குமார் என இரண்டு மகன், மீனாட்சிஎன்கிற மகள் உள்ளனர்.

குவைத் நாட்டில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளதாக ஜான்சாமுவேல் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. 

அடுத்த ஜூலை 6ஆம் தேதி ராஜூஎபினேசர் தனது வேலையை விட்டுவிட்டு தமிழகம் திரும்பி, தனது குடும்பத்தினருடன் வாழ திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் தீ விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

அவர் உடல்நிலை குறித்த உண்மையான நிலை என்ன என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவரது மனைவி ராஜேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

VIDEOS

Recommended