• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ராமநாதபுரம் வழியாக கிழக்கு கடற்கரை பகுதியில் தூத்துக்குடி சென்னை இடையே ரெயில் பாதை அமைக்கப்படுமா ?

ராமநாதபுரம் வழியாக கிழக்கு கடற்கரை பகுதியில் தூத்துக்குடி சென்னை இடையே ரெயில் பாதை அமைக்கப்படுமா ?

கார்மேகம்

UPDATED: Sep 9, 2024, 8:43:42 AM

இராமநாதபுரம்

ராமநாதபுரம் வழியாக கிழக்கு கடற்கரை பகுதியில் தூத்துக்குடி சென்னை இடையே ரெயில் பாதை அமைக்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்

( சுற்றுலா தலங்கள் )

தமிழகத்தில் உள்ள மிக முக்கிய சுற்றுலா தலங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன குறிப்பாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரெயில் மூலமாக ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்

இதே போல ஏர்வாடி தர்ஹா திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவில் திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோவில் தேவிபட்டினம்,  நவக்கிரக கோவில் ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலயம் என மாவட்டத்தில் பல முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளன அது போல் சென்னை திருப்பதி கன்னியாகுமரி பெங்களூர் கோவை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்தும் ராமேஸ்வரம் வரும் ரெயில்களில் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்

தற்போது பெங்களூரு கோவை திருப்பதி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் மதுரை வழியாகவும் காரைக்குடி தேவகோட்டை மானாமதுரை வழியாக வந்து செல்கின்றன

Ramanathapuram News

( கிழக்கு கடற்கரை சாலை)

இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரெயில்கள் இயக்க வேண்டும் என்பதே ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது 

குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து  வேம்பார் குளத்தூர் சூரங்குடி சாயல்குடி சிக்கல் ஏர்வாடி கீழக்கரை வழியாக ராமநாதபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலையில் ரெயில் பாதை அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது 

அது போல் ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டினம் தொண்டி மிமீசல் பட்டுக்கோட்டை நாகபட்டினம் வேளாங்கண்ணி வழியாக சென்னை வரையிலும் கிழக்கு கடற்கரை சாலையிலும் ரெயில் பாதை அமைக்கும் பட்சத்தில் ராமேஸ்வரம் திருச்செந்தூர் தூத்துக்குடி ராமநாதபுரம் உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் பொது மக்கள்  மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்

கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டால் வணிக ரீதியாகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

Latest News in Tamil

( வளர்ச்சி அடையும் )

குறிப்பாக ராமேஸ்வரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக உள்ளதால் மீனவர்கள் பிடித்து வரக்கூடிய பல வகை மீன்கள் ரெயில்கள் மூலம் பல ஊர்களுக்கும் இந்த வழித்தடத்தில் அனுப்பி வைப்பதற்கும் மிகவும் வசதியாக இருக்கும்

தூத்துக்குடியில் இருந்து ராமநாதபுரம் வழியாக சென்னை வரையிலும் கிழக்கு கடற்கரை பாதையில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டால் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள பல மாவட்டங்களும் வளர்ச்சி அடையும் 

Breaking News in Tamil

( பொது மக்கள் எதிர்பார்ப்பு)

எனவே இது குறித்து தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி மத்திய அரசுடன் பேசி தூத்துக்குடி ராமநாதபுரம் சென்னை இடையே கிழக்கு கடற்கரை சாலையில் ரெயில் போக்குவரத்து திட்டத்தை கொண்டு வருவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளதால் இந்த திட்டம்  எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். 

 

VIDEOS

Recommended