தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்வார் - சி.பொன்னையன்.
L.குமார்
UPDATED: Nov 11, 2024, 12:55:27 PM
திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரி தொகுதி, சோழவரம் மேற்கு ஒன்றியம் மற்றும் ஆரணி பேரூர் கழக அதிமுக சார்பில் செயல் வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் ஆண்டார்குப்பம் ஆளவந்தார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில்,சிறப்பு அழைப்பாளராக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும், கட்சியின் செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும்,பொன்னேரி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன் ஆகியோர் கலந்துகொண்டு 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்பார் அதற்கு அதிமுகவினர் இன்று முதலே அயராது பணியாற்ற வேண்டும்.
சி.பொன்னையன்
மேலும், அதிமுக கொண்டு வந்து மக்கள் பயன் பெறும் வகையில் தாலிக்கு தங்கம், லேப்டாப்,மகளிர்க்கு மானிய விலையில் ஸ்கூட்டி என செயல்படுத்தி வந்த பல்வேறு நலத்திட்ட பணிகளை திமுக அரசு நிறுத்தியதை பட்டியலிட்டு பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும் என்று விளக்கிக் கூறினார்.
அதிமுக
மேலும், 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தேர்தல் நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவே இறுதியானது மக்கள் அதிமுகவின் கூட்டணியில் உள்ளனர்.என முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் கூறினார்.