கணவனை விட்டு பிரிந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஓரின சேர்க்கைக்கு மறுத்த 6 வயது சிறுவனை அடித்து கொலை செய்த காமக்கொடூரன்.
லட்சுமி காந்த்
UPDATED: Oct 2, 2024, 11:04:21 AM
போக்சோ
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் உள்ள தணிகைவேல் நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ், 34. காஞ்சிபுரம் சர்வே துறையில், ஆய்வாளராக பணியாற்றுகிறார். ஏற்கனவே திருமணமான இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் அருகே டிபன் கடைக்கு சாப்பிட சென்ற ராஜேஷுக்கு, அங்கு கணவரை பிரிந்து வாழும், 30 வயது தனம் என்ற தனலட்சுமி உடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அந்த பெண்ணுக்கு ஒன்பது வயதில் சோபனா என்ற மகளும் ஆறு வயதில் குகன் என்ற மகனும் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
பாலியல் சீண்டல்
கள்ள தொடர்புடன் பழகிய தனலட்சுமிக்கு பரந்தூர் விமான நிலை எடுப்பு அலுவலகத்திலேயே தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி வேலையும் வாங்கி கொடுத்து விட்டார்.
தனலட்சுமி உடன் கணவன்போல் பழகியதால், தன் குழந்தைகளுடன் பழகவும், அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லவும் ராஜேஷை தனலட்சுமி அனுமதித்துள்ளார்.
கடந்த 28ம் தேதி, மதியம் இரு குழந்தைகளையும் தன் வீட்டிற்கு அழைத்து சென்ற ராஜேஷ், அவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
கொலை
இதில், உடன்பட மறுத்த 5 வயது சிறுவனை அடித்தில், மயக்கமடைந்துள்ளான். மயங்கிய நிலையில் இருந்த குகனையும் , சோபனாவையும் கொண்டு வந்து தனலட்சுமி வீட்டில் ராஜேஷ் விட்டு சென்று விட்டார்.
மயங்கிய நிலையில் இருந்த குகன், துாங்குவதாக கருதி, அந்த தனம் விட்டுவிட்டார். மறுநாள், 29ம் தேதி காலையிலும் சிறுவன் எழுந்திருக்காமல் மயங்கி கிடந்தான். உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவர் பரிசோதனை செய்ததில், சிறுவன் ஏற்கனவே இறந்ததுவிட்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த தனம், குகனின் அக்கா சோபனாவிடம் விசாரித்துள்ளார்.
ஓரின சேர்க்கை
அப்போது, தன்னிடமும், தம்பியிடமும் ராஜேஷ், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதை கூறிய ஷோபனா என்னுடைய தம்பியை ராஜேஷ் அங்கிள் அடித்தார், மிதித்தார், தள்ளிவிட்டார் அதனால் என் தம்பி இறந்து விட்டான் என காவல்துறையிடம் தெளிவாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி, காஞ்சி தாலுகா போலீசில், தனத்தின் கணவர் ஆனந்தன் புகார் அளித்தார். அவரது புகாரின்படி, சர்வேயர் ராஜேஷை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
போலீசார் விசாரணையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது, சிறுவனை அடித்து கொலை செய்ததை ராஜேஷ் ஒப்புக்கொண்டார்.
Latest Crime News In Tamil
இதையடுத்து, கொலை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி, அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
அரசு உத்தியோகத்தில் உள்ள காமக்கொடூரன் ஒருவன் 30 வயது பெண்மணியுடன் கள்ளத்தொடர்பு, 9 வயது மகளுக்கு பாலியல் சீண்டல், ஆறு வயது சிறுவனுடன் ஓரின சேர்க்கை செய்த அநியாயம் உலகில் இதுவரையில் கேள்விப்பட்டதே இல்லை என அப்பகுது மக்கள் கொந்தளிப்புடன் பேசுகின்றனர்.
முதன் முதலில் இந்த கொலை சம்பவத்தை நமது செய்தியாளர் தான் வெளி கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.