நள்ளிரவில் ஊருக்குள் வந்த மலைப்பாம்பு 3 மணி நேரம் காலதாமதமாக வந்த வனத்துறையினர்.

சுரேஷ் பாபு

UPDATED: Sep 9, 2024, 8:59:19 AM

திருவள்ளூர் மாவட்டம் 

திருத்தணி தாலுக்கா கே.ஜி.கண்டிகையில் நள்ளிரவில் ஊருக்குள் மலைப்பாம்பு பத்தடி உள்ள பாம்பு கூர்ந்து வந்தது இதனை கண்ட ஊர் மக்கள் அச்சத்தில் உறைந்து ஓடினர் 

அந்த பகுதியை சார்ந்த இளைஞர்கள் பத்துக்கு மேற்பட்டோர் ஒன்று திரண்டு அந்த மலைப்பாம்பை லாபகரமாக பிடித்து வனத்துறை அதிகாரிக்கு தகவல் அளித்தனர் 

ஆனால் திருத்தணியில் இருந்து வனத்துறை அதிகாரிகள் வர முடியாது காலையில் வருகிறோம் என்று கூறியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் உடனடியாக வரவேண்டும் என்று கூறியதால் சம்பவ இடத்திற்கு காவல்துறையினரும் வந்தனர் 

மலைப்பாம்பு

வனத்துறை அதிகாரிகள் திருத்தணியில் இருந்து மூன்று மணி நேரம் காலதாமதமாக வந்தனர் வனத்துறை அதிகாரிகளிடம் இளைஞர்கள் வாக்குவாதம் செய்தனர்

நீங்கள் எப்படி இரவில் பத்திரமாக மலை பாம்பை பார்த்து வைத்துக்கொள்ள சொன்னீர்கள் மலைப்பாம்பை நாங்கள் பத்திரமாக இருவரும் முழுவதும் பார்த்து வைத்திருக்க முடியுமா நீங்கள் வந்து வாங்கி செல்லக்கூடாதா ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று வனத்துறை அதிகாரிகளும் வாக்குவாதம் செய்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது 

இந்த பரபரப்பு 30 நிமிடத்திற்கு பிறகு காவல்துறை அதிகாரிகளுக்கு முன்பு நடந்த இந்த வாக்குவாதத்திற்கு பிறகு மலைப்பாம்பை வனத்துறை அதிகாரிகள் வாங்கிச் சென்றனர் 

நல்லூரில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

VIDEOS

Recommended