- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஆயுத பூஜை உற்சாக கொண்டாட்டம் - பூக்கள், பூஜை பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது பொதுமக்கள் அதிர்ச்சி.
ஆயுத பூஜை உற்சாக கொண்டாட்டம் - பூக்கள், பூஜை பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது பொதுமக்கள் அதிர்ச்சி.
JK
UPDATED: Oct 11, 2024, 11:43:52 AM
திருச்சி
இன்று தமிழக முழுவதும் ஆயுத பூஜை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பஸ், லாரி, வேன், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்து சந்தனமிட்டு, குங்குமமிட்டு மாலை அணிவித்து பொறி, பொட்டுக்கடலை, அவல் மற்றும் பழங்கள், வாழை மரம், குறுத்து வைத்து பூஜை செய்து தீபமேற்றி வழிபாட்டில் ஈடுபட்ட வருகின்றனர்.
ஆயுத பூஜையையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட்டில் பொறி, பொட்டுக்கடலை, அவல், வாழைப்பழம், சந்தனம், குங்குமம், வாழை இலை, வாழைமரம், தென்னை குருத்து காய்கறிகள் மற்றும் பூஜை பொருட்கள் விறுவிறுப்பாக விற்பனை நடைபெற்று வருகிறது.
ஆயுத பூஜை
பூஜை பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலை மோதுகிறது. பூஜை பொருட்களின் விலை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு சற்று அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது, பூஜைக்கு பூக்கள் திருச்சி காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.750க்கு விற்கப்படுகிறது. மற்ற பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
விஜயதசமி
சிறியரூபாய் 40 வரையிலும், 5 குறித்துக் கொண்ட ஒரு கட்டுக்கு ரூபாய் 10 முதல் 15 வரையிலும், செவ்வந்தி பூ(1கிலோ) - ரூ.400 க்கும், , பன்னீர் ரோஸ் - 350க்கும், முல்லை பூ - 470 சம்பங்கி பூ - 360 ரோஜா - 500 க்கும், அரளி பூ 600க்கும் விற்கப்பட்டு வருகிறது.
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடும் நிலையில் இந்த விலை இன்றும் கடுமையாக உயரலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.