• முகப்பு
  • குற்றம்
  • ஆசை வார்த்தை கூறி பழகி பெண்ணை கர்ப்பமாக்கிய காதலன் அதிமுக உறவினர் என்பதால் காவல்துறையில் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பெண் பேட்டி

ஆசை வார்த்தை கூறி பழகி பெண்ணை கர்ப்பமாக்கிய காதலன் அதிமுக உறவினர் என்பதால் காவல்துறையில் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பெண் பேட்டி

JK

UPDATED: Oct 7, 2024, 6:13:42 PM

திருச்சி

பட்டவர்த் ரோடு பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் வசித்து வருபவர் கிருத்திகா இவருக்கு திருச்சி ஜங்ஷன் பகுதியில் தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தவர் பொன்னையன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்படுகிறது.

பின்னர் அது காதலாக மாறியது இருவரும் தனியே சந்தித்து வந்த நிலையில் கிருத்திகா கர்ப்பம் ஆக்கியுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தெரிவித்த போது இப்போது குழந்தை வேண்டாம் வீட்டிற்கு தெரிந்தால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். ஆகையால் கர்ப்பத்தை கலைத்துவிடு என கூறி மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார்.

Breaking News In Tamil

பின்னர் காதலனை நம்பி கர்ப்பத்தை கலைத்து உள்ளார் பின்னர் திருமணத்தை தவிர்த்ததால் கிருத்திகா விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார் . மீண்டும் சமரசம் பேசியதால் அப்போது புகார் அளிப்பதை நிறுத்தியுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் முற்றிலுமாக தொடர்பை துண்டித்துள்ளார். இதனை அடுத்து தான் ஏமாந்ததை அறிந்த கிருத்திகா கடந்த செப்டம்பர் மாதம் 15 ம் தேதி தபால் மூலம் கோட்டை காவல் நிலையத்தில் புகாட் அளித்துள்ளார்.

Latest Crime News Today In Tamil 

அதனைத் தொடர்ந்து மறுநாள் 16ம் தேதி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அலைக்கழிக்கப்பட்டார் பின்னர் ஒரு வழியாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இது பற்றி அறிந்த காதலன் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு அளித்திருந்தார். ஆனால் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். 

முன் ஜாமீன் தள்ளுபடி செய்த நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்யாமல் அவருக்கு ஆதரவாக செயல்படுவதாக மாநகர காவல் ஆணையர் காமினியிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அதிமுக

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்மணி கூறும் போது, தற்போதைய மத்திய அரசின் பி என் எஸ் எஸ் புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், தகாத வார்த்தையால் திட்டிய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து காதலனை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பொன்னையனின் உறவினர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அதிமுகவில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்பதால் அரசியல் தலையீடு காரணமாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் தெரிவிக்கிறார்.

 

VIDEOS

Recommended