ஹாயாக உலா வந்த புலி கவனமுடன் இருக்க பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை.

அச்சுதன்

UPDATED: Jul 25, 2024, 12:40:07 PM

நீலகிரி மாவட்டம்

55 சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும் இங்கு யானை புலி கரடி காட்டு மாடு காட்டுப்பன்றி மான் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் வசிக்கக்கூடிய மாவட்டமாகும்.

புலி

சமீப காலமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு அதிக அளவில் குடியிருப்பு பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ளன இந்நிலையில் நேற்று பகல் வேளையில் உதகை அருகே உள்ள அப்பர் பவானி பகுதியில் புலி ஒன்று ஹாயாக ரோட்டில் நடந்து சென்றது.

Nilgiris News Today

இதனை கண்ட அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர் இந்த காட்சியானது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

மேலும் வனத்துறையினர் வனவிலங்குகள் அதிகளவில் குடியிருப்பு பகுதிகளுக்கு வர தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் கவனமுடனும் இருக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended