காங்கிரஸ் தேர்தல் பணியை தொடங்கிவிட்டது - செல்வப்பெருந்தகை
சுந்தர்
UPDATED: Jul 21, 2024, 6:56:14 PM
காமராஜர் பிறந்த நாள் விழா
வையொட்டி காங்கிரஸ் தங்கள் தேர்தல் பணியை தொடங்கி விட்டதாக அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
சென்னை குன்றத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஐம்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வர்த்தகத்துறை தலைவர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் காமராஜர், அம்பேத்கர், கக்கன், வசந்தகுமார், ராகுல் காந்தி ஆகியோரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
செல்வப் பெருந்தகை
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஐம்பெரும் விழாவை முன்னிட்டு நிகழ்ச்சியில் 5 பேருக்கு இலவசமாக ஆட்டோ வழங்கப்பட்டது பொதுமக்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை, "பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
காங்கிரஸ்
இதில் ஆட்டோ, தையல் மெஷின் புடவைகள் மளிகை சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
பெருந்தலைவர் காமராஜர் இந்த தேசத்தின் வரலாறாக இன்றும் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு விழா எடுப்பதில் காங்கிரஸ் பேரியக்கம் பெருமை கொள்கிறது. காமராஜர் பிறந்த நாளை ஒட்டி காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணியை தொடங்கிவிட்டது.
பாஜக
மத்திய பட்ஜெட்டில் எப்போதும் தமிழகத்திற்கு துரோகம் செய்வது தான் பாஜகவின் வேலை. அது இந்த பட்ஜெட்டிலும் செய்வார்கள்.
பத்தாண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வந்தார்கள் தற்போது வஞ்சிக்கப் போகிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதனால் பாஜகவினர் வெற்றி பெறப் போவதில்லை, நீதி தான் வெற்றி பெறப் போகிறது" என்று தெரிவித்தார்.