296 போலி பழங்குடி சான்றிதழ் ரத்து.
சுரேஷ்பாபு
UPDATED: Nov 4, 2024, 8:00:58 PM
திருவள்ளூர் மாவட்டம்
296 போலி பழங்குடியை சான்றிதழ்களை தற்போதைய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அவர்கள் ரத்து செய்துள்ளார் பழங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கும் தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாகவும் இருளர் கூட்டமைப்பு சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்..
இந்தியாவில் 12 கோடிக்கு மேலாக தமிழகத்தில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பழங்குடி மக்கள் 37 இன குழுக்களாக வாழ்கின்றன இவர்களுக்கு அரசு சார்பில் கல்வி வேலை வாய்ப்புகளில் தமிழ்நாட்டில் ஒரு சதவீதமும் ஒன்றிய அரசியல் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது
போலி பழங்குடி சான்றிதழ்
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு உதவிகள் மூலம் இன்று தமிழகத்தில் ஏராளமான பழங்குடி இளைஞர்கள் இளங்கலை முதுக்களை பொறியியல் பட்டம் என படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் அல்லல்பட்டு கொண்டு உள்ளன
இந்நிலையில் தமிழ்நாட்டில் பழங்குடி அல்லாத மக்களுக்குள் சில உயர் சாதி சமூகத்தினர் சில அதிகாரிகளுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து போலி பழங்குடி சான்று பெற்றுள்ளன
இதனால் உண்மையான பழங்குடி மக்களின் கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை பறிக்கின்றனர்
இதில் குறிப்பாக கொண்டாரிட்டி காட்டுநாயக்கன் மலைவேடன் போன்ற இனக்குழு பேரில் தான் போலி சான்றிதழ்கள் அதிகமாக பெறப்படுகின்றன
திருத்தணி ஆர்டிஓ ஜெயராமன்
இதற்கு சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் உடந்தையாக உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு திருத்தணி ஆகிய தாலுகாக்களில் 11 கிராமங்களில் உள்ள 124 குடும்பங்களை சேர்ந்த296 கொண்டாரிட்டி சான்றுகளை உயர் சமூக மக்கள் 2018 ஆம் ஆண்டு திருத்தணி ஆர்டிஓ ஜெயராமன் மூலம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பெறப்பட்டுள்ள செய்தி ஆதிவாசி இருளர் முன்னேற்ற சங்கத்திற்கு தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பிற்கும் தெரியவந்த நிலையில்
போலீசான்றிதழ்களை அரசு ரத்து செய்ய கோரி தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு திருவள்ளூர் ஆதிவாசி இருளர் சங்கம் சார்பாக பலமுறை மனு கொடுத்ததின் அடிப்படையில் அரசு கோட்டாட்சியர் தலைவர்களை கொண்டு இரண்டு முறை ஆய்வு செய்து தற்போது அவர்களின் அறிக்கை அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 11 கிராமங்களில் 296 போலி பழங்குடி சான்றிதழ்களை தற்போதைய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ரத்து செய்து உள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
பழங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சர்க்கும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் அவர்களுக்கும் தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக இருளர் கூட்டமைப்பு சார்பாகவும் உண்மையான பழங்குடி மக்களின் உரிமையை நிலைநாட்டிய எங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்
பேட்டி குணசேகரன் (தமிழக ஆதிவாசி அமைப்புகளின் கூட்டமைப்பு) மாநில பொதுச் செயலாளர்.