பிறந்து 25 நாளான குழந்தையை குரங்கு கடித்து 14 தையல் போட்ட அதிர்ச்சி சம்பவம்.

சண்முகம்

UPDATED: Jun 17, 2024, 5:50:44 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே முடிகண்டநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் விஜய சங்கீதன்- வினோதினி தம்பதி இவர்களது இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 25 நாள் ஆகிறது. குழந்தையை தூளி கட்டி தூங்க வைத்த குடும்பத்தினர் வீட்டு வேலைகளை  பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது குடியிருப்பு பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த மிகப்பெரிய குரங்கு ஒன்று வீட்டுக்கு உள்ளே புகுந்து தூளியில் தூங்கிக் கொண்டிருந்த பிறந்து 25 நாளான பெண் குழந்தையை கடித்து குதறியதில் இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டு 14 தையல்கள் போடப்பட்டுள்ளது. மேலும் குழந்தைக்கு உயிர் ஆபத்து இருந்து வருவதாக மருத்துவர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக இதே கிராமத்தில் குரங்கு கடித்த நான்காவது குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.

குரங்கை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.

பல நாட்களாக சொல்லியும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை உடனடியாக பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தி, கடித்து வரும் குரங்கை பிடித்து அப்புறப்படுத்தாவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended