• முகப்பு
  • குற்றம்
  • RP டிராவல்ஸ் அலுவலகத்தில் ஓட்டுநரை கையை கட்டி தாக்கி அட்டூழியம்.

RP டிராவல்ஸ் அலுவலகத்தில் ஓட்டுநரை கையை கட்டி தாக்கி அட்டூழியம்.

முகேஷ்

UPDATED: Jul 25, 2024, 10:41:09 AM

மதுரை மாட்டுத்தாவணி

பகுதியில் செயல்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தில், நாள்தோறும் சென்னை, பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், RP டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர் ஒருவர் பணியின்போது முறைகேடு செய்ததாக கூறி, நேற்றிரவு அலுவலகத்தில் உள்ளே அவரது ஊழியர்கள் கையை கட்டி போட்டு அடித்து விசாரணை செய்தனர். 

Latest Madurai District News

இந்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில், ஓட்டுநரின் கை இரண்டையும் கயிறால் ஜன்னலில் கட்டிவைத்து கேள்வி கேட்டு விசாரணை நடத்தும் காட்சிகள் உள்ளன. 

ஓட்டுநர் கை வலியால் கதறினாலும், அவருக்கு தண்ணீரை கொடுத்து மீண்டும் விசாரணை செய்யும் கொடூரமான காட்சிகளும் பதிவாகியுள்ளன.

முதலில், "தான் எந்த தவறும் செய்யவில்லை; ஏன் என்னை அடிக்கிறீர்கள்?" என கேள்வி கேட்டாலும், தொடர்ச்சியாக துன்புறுத்துவதும், "உன்னை இனிமேல் மதுரையில் பார்க்க கூடாது" என மிரட்டுவது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது.

District News & Updates in Tamil 

இந்த வீடியோவை அலுவலகத்தில் உள்ள நபர்களே பதிவு செய்து, அனைத்து ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் உள்ள WhatsApp குழுமத்தில் பதிவிட்டு, "இந்த ஓட்டுநரை யாரும் பணிக்கு சேர்க்கக்கூடாது" எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்து நிறுவன அலுவலகத்தில் விசாரித்த போது, "இரவு பணியில் இருந்தவர்களுக்கு தான் அது தெரியும், அவர்கள் உறங்குவதால் தற்போது கேட்க இயலாது" என தெரிவித்தனர்.

மனித உரிமை மீறல்

ஓட்டுநர் தவறு செய்திருந்தால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். ஆனால், நபர்களை கையை கட்டி வைத்து கொடூரமாக தாக்கியதற்கு மனித உரிமை மீறல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இந்த வீடியோ வெளியான நிலையில், மதுரை மாட்டுத்தாவணி காவல்துறையினர் நேரில் சென்று இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RP டிராவல்ஸ் 

மனித உரிமை மீறல்கள் நடைபெற்று, அதனை ஆதரிக்கும் வீடியோ வெளியாகி உள்ள நிலையில், மனித உரிமை ஆணையம் தலையிடுமா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

RP டிராவல்ஸ் நிறுவனத்தில் இதேபோன்று சில ஓட்டுநர்கள் முறைகேடு செய்ததாக கூறி அடித்து தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

VIDEOS

Recommended