- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தேனி மாவட்டம் சுருளி அருவியில் 5 நாட்கள் நடைபெறும் சாரல் திருவிழாவை யொட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி இலவசம்.!!
தேனி மாவட்டம் சுருளி அருவியில் 5 நாட்கள் நடைபெறும் சாரல் திருவிழாவை யொட்டி சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி இலவசம்.!!
ராஜா
UPDATED: Sep 28, 2024, 3:22:46 PM
தேனி மாவட்டம்
நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பிரசித்தி பெற்ற சுருளி அருவியில் சாரல் திருவிழா இன்று முதல் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
மேலும் சுற்றுலா, வேளாண், தோட்டக்கலை, சமூக நலன் மற்றும் கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.
சுருளி அருவி சாரல் திருவிழா
இதையடுத்து விழாவில் பேசிய ஆட்சியர் ஷஜீவனா, சாரல் திருவிழாவையொட்டி இன்று முதல் 5 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்குச் செல்வதற்கான வனத்துறை சார்பில் வசூலிக்கப்படும் நுழைவுத் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் பரதநாட்டியம், கிராமப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
Breaking News in Tamil
இவ்விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆனந்த், உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் தாட்சாயணி உள்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.