- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கடைக்காரரிடம் பறிமுதல் செய்த தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் துணை காவல் கண்காணிப்பாளர்க்கு நீதிபதி உத்தரவு
கடைக்காரரிடம் பறிமுதல் செய்த தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் துணை காவல் கண்காணிப்பாளர்க்கு நீதிபதி உத்தரவு
கார்மேகம்
UPDATED: Aug 24, 2024, 10:01:04 AM
இராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் எம்.சாலைக்கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் மதுரை ஐ கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகே மளிகைக்கடை நடத்தி வருகிறேன்
இப்பகுதியில் மணல் கடத்தல் குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்து வந்தேன் இதனால் மணல் கடத்தல் காரர்களுடன் தொடர்பில் இருந்த போலீஸ் சார் ஆத்திரம் அடைந்து என் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்
அச்சமயத்தில் என்னை கடுமையாக தாக்கியதில் எலும்பு முறிவு ஏற்பட்டது இது குறித்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன் அதன் பேரில் எனக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
துணை காவல் கண்காணிப்பாளர்
இந்தநிலையில் தஞ்சாவூரில் இருந்த என்னை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் என்பவரும் போலீசாரும் மிரட்டி தாக்கினர் என்னிடம் இருந்த ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்தை பறித்துக் கொண்டனர்
தற்போது சப் இன்ஸ்பெக்டர் சரவணன் பரமக்குடியில் பணியாற்றி வருகிறார் அவரிடம் பணத்தை கேட்டபோது முதுகுளத்தூர் துணை காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றுக்கொள்ளும்படி கூறினார்.
உயர் நீதிமன்றம்
மேலும் மதுரை ஐ கோர்ட்டில் நான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறும்படி கட்டாயப் படுத்துகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய ரூ.1 லட்சத்து 14. ஆயிரத்தை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்
இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி மனுதாரர் முதுகுளத்தூர் துணை கண்காணிப்பாளரிடம் நேரில் ஆஜராக வேண்டும் அவரிடம் உரிய தொகையை திருப்பி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.