• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பழவேற்காடு மயான பகுதியில்  அரிச்சந்திரன் கோயிலை தரைமட்டமாக்கி சவுடு மணல் எடுத்துச் செல்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

பழவேற்காடு மயான பகுதியில்  அரிச்சந்திரன் கோயிலை தரைமட்டமாக்கி சவுடு மணல் எடுத்துச் செல்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

L.குமார்

UPDATED: Oct 24, 2024, 6:21:23 PM

திருவள்ளூர் மாவட்டம்

பழவேற்காடு பகுதியில் கோட்டை குப்பம் ஊராட்சிக்குட்பட்ட ஆண்டி குப்பம்,கோட்டை குப்பம்,நடுவூர் மாதா குப்பம்,டாக்டர் அம்பேத்கர் நகர்,செஞ்சி அம்மன் நகர்,தோனிரேவு,ஜமீலாபாத் ஆகிய கிராமங்கள் உள்ளன.

இதில் கோட்டைக்குப்பம்,ஆண்டி குப்பம் ஆகிய கிராமங்களுக்கு செஞ்சி அம்மன் நகர் அருகே சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டிற்கு சவ அடக்கம் செய்ய வரும்போது அரிச்சந்திரனை வழங்கி சவ அடக்கம் செய்வர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆண்டிகுப்பத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் சவ அடக்கம் செய்வதற்காக சுடுகாடு பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

அங்கு அரிச்சந்திரன் கோயில் இல்லாதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்‌மேலும் ஹரிச்சந்திரன் சிலை தரை மட்டமாக்கப்பட்டு அருகில் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு சவுடு மணல் எடுத்துச் செல்லப்பட்டதையும் கண்டு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் சவம் அடக்கம் செய்யப்பட்டு இன்று அப்பகுதியில் கோட்டை குப்பம் ஆண்டி குப்பம் கிராமத்தை சேர்ந்த கிராம நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை அழைத்துக் கொண்டு வந்து அரிச்சந்திரன் கோயில் தரைமட்டமாக்கப்பட்டதையும் பெரிய பள்ளங்கள் அங்கே தோண்டப்பட்டதையும் காண்பித்து நேரடியாக புகார் அளித்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

 

VIDEOS

Recommended